New Update
/indian-express-tamil/media/media_files/d1myw4A57vrn6vK1eCiT.jpg)
வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்து குரைத்ததாகக் கூறி 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாகக் கூறி 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் கடுமையாகத் தாக்கிய சி.சி.டி.வி வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்து குரைத்ததாகக் கூறி 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாகக் கூறி 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் கடுமையாகத் தாக்கிய சி.சி.டி.வி வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.சி.டி.வி வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்து குரைத்ததாகக் கூறி 5 வயது சிறுவனை ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
அந்த 5 வயது சிறுவன் டியூஷன் போய்விட்டு, டியூஷனில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் நாய் குரைப்பதைப் பார்த்துள்ளான். பின்னர், அந்த சிறுவன் அந்த நாயைப் பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்திருக்கிறான். இது நாயின் உரிமையாளரை கோபப்படுத்தியுள்ளது.
அப்போது, பள்ளிப் பையை தோளில் சுமந்து வரும் சிறுவன் மீது அந்த நபர் ஒரு நிமிடம் சரமாரியாக தாக்குவது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. அதில், அந்த நபர் சிறுவனைத் தரையில் தள்ளி சிறுவனின் மார்பில் மிதிக்கிறார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, சிறுவன் மற்றொரு சிறுவனுடன் செல்கிறார். சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்து குரைத்ததாகக் கூறி 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், ஒரு நாயைக் கிண்டல் செய்ததற்காக 5 வயது சிறுவனை இரக்கமில்லாமல் கொடூரமாகத் தாக்கிய அந்த நபர் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.