கந்தல் துணிகளை சேகரிக்கும் சிறுவனுக்கு புது துணி, செருப்பு வாங்கி தந்த போலீஸ்காரர்: வீடியோ
viral video: கந்தல் துணிகளைத் சேகரிக்கும் சிறுவனுக்கு பஞ்சாப் போலீஸ்காரர் ஒருவர் புது துணி, புது செருப்பு வாங்கித் தந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
viral video: கந்தல் துணிகளைத் சேகரிக்கும் சிறுவனுக்கு பஞ்சாப் போலீஸ்காரர் ஒருவர் புது துணி, புது செருப்பு வாங்கித் தந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Advertisment
கந்தல் துணிகளை சேகரிக்கும் சிறுவனுக்கு புதிய ஆடைகள் மற்றும் புது செருப்பு வாங்கிக் கொடுத்து பஞ்சாப் போலீஸ்காரர் ஒருவர் மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அபய் கிரி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 5.14 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோ எங்கே எப்போது பதிவு செய்யப்பட்டது என தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோவில் போலீஸ்காரர் மேம்பாலத்தின் கீழ் சிறுவனுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பது தெரிகிற்து. சிறுவன் தண்ணீர் குடித்துவிட்டு அவருடைய கால்களைத் தொட்டு நன்றி சொல்கிறான். வீடியோவில், போலீஸ்காரர் அந்த சிறுவனுக்கு அணிய புதிய செருப்புகளையும் உடைகளையும் கொடுக்கிறார்.
சிறுவன் நன்றியுணர்வுடன் மீண்டும் மீண்டும் அந்த் போலீஸ்காரரின் கால்களைத் தொட முயற்சி செய்கிறான். சிறுவன் பரிசைப் பெற்றவுடன் புன்னகைத்து மகிழ்ச்சியுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறான்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர், “இது வாழ்க்கை, மற்றது எல்லாம் சுயநலம்” என்று இந்தியில் கருத்து தெரிவித்துள்ளார்.
“உங்களைப் போன்ற ஒரு போலீஸ் அதிகாரிதான் இருக்க வேண்டும்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஒரு கேரள ஓவியர் ஒரு போலீஸ் அதிகாரியின் ஓவியத்தை வரைந்து அவரைப் பாராட்டினர். கேரள காவல்துறை ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், ஒரு போலீஸ்காரர் ஒரு சந்திப்பில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதைக் காட்டுகிறது. ஒரு ஓவியர் அவரது 'கடமையைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது உருவப்படத்தை வரைந்தார். போலீஸ்காரர் தனது கடமையைத் தொடரும்போது, ஓவியர் முன்னோக்கி நகர்ந்து அவரிடம் அவருடைய உருவப்படத்தை ஒப்படைக்கிறார். காவலர் மகிழ்ச்சியடைந்து அந்த ஓவியரின் பெயரைக் கேட்கிறார். காவல்துறையின் ட்வீட்டில் அந்த ஓவியர் சிம்லால் என அடையாளம் காணப்பட்டார். “நீ, நான் என்பதற்குப் பதிலாக, நாம் என்று பயன்படுத்தப்படும்போது மாற்றம் தொடங்குகிறது நன்றி: ஷிம்லால் என்று அந்த வீடியோ பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"