pv sindhu workout videos : முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்தியிருக்கும் பி.வி சிந்துவின் வெற்றிக்கு என்ன காரணம்? என்ற ரகசியத்தை உடைத்தார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. அசூர பயிற்சியில் பி.வி சிந்து ஈடுப்படும் வீடியோவை அவர் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நட்நத உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்தார் பி.வி சிந்து.இந்த போட்டியின் அரையிறுதியில் வி.சிந்து வெற்றி பெற்ற போதே இறுதிப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு மேலூங்கியது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் நடைப்பெற்ற BWF WORLD CHAMPIONSHIPS நிகழ்வில், பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுக்கு எதிராக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இறுதிப்போட்டியில் விளையாடினார். 38 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில், சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஒகுஹாராவை தோற்கடித்து சாதனை படைத்தார். முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. இதன் மூலம், பேட்மிண்டனில் வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஷட்லர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய பி.வி சிந்து தன் வெற்றியை தமது தாய்க்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அதன் பின்பு, பி.வி சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. முன்னணி விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் பி.வி சிந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பி.வி சிந்துவை நேரில் அழைத்து பாராட்டினார். பல்வேறு கேலி பேச்சுக்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார் சிந்து. பேட்மிண்டன் தொடரில் சிந்து எப்போதுமே சேவ் கேம் விளையாடுவதாக ஒரு சர்ச்சை கருத்து இருந்து வந்தது. அவர் தொடர்ந்து, வெள்ளி பதக்கம் வெல்வதில் முனைப்பு காட்டுவதாக சமீபத்தில் சிலர் விமர்சித்திருந்தனர். ஆனால் அது எல்லாவற்றிற்கும் இந்த வெற்றி பதில் அளித்தது.
Brutal. I’m exhausted just watching this. But now there’s no mystery about why she’s the World Champ. A whole generation of budding Indian sportspersons will follow her lead & not shrink from the commitment required to get to the top... pic.twitter.com/EYPp677AjU
— anand mahindra (@anandmahindra) August 27, 2019
இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பி.வி சிந்துவின் வெற்றிக்கு காரணமான அசூர பயிற்சி வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “ பிவி சிந்து உலக சாம்பியனாக வெற்றி பெற்றதில் எந்த மர்மமும் இல்லை. வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரும் அவரின் வழியை பின்பற்ற வேண்டும். முதலிடம் பெறுவதற்கான அர்ப்பணிப்பிலிருந்து யாரும் விலக மாட்டார்கள் ” என்று கூறியுள்ளார்.
சிந்துவின் பயிற்சி வீடியோவை பார்த்து பலரும் மிரண்டு போய்தான் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.