போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் மலைப் பாம்பு நிதானமாக சாலையைக் கடந்ததால் அதற்கு வழிவிட்டு வாகனங்கள் எல்லாம் வரிசையில் நின்றதால் அந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூமியில் எல்லா உயிரினங்களும் இயற்கையில் உயிர் சூழலில் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப இருப்பது அவசியம். அதனால் தான், சில விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும்போது அதனைக் பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.
பொதுவாக பாம்பு என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். வழுவழுவென்று நீளமான உடல், பார்க்கும்போதே ஏற்படும் ஒரு அசூயை, அது விஷப் பாம்பாக இல்லாவிட்டாலும்கூட பாம்பு கடித்தால் இறந்துவிடுவோம் என்று மக்களிடையே நிலவும் பொதுவான ஒரு அச்சம்தான் பாம்பு என்றதும் மனதில் எழுகிறது.
— Nature is brutal (@brutainature) December 23, 2020
அதனால்தான், பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவது. உண்டு அந்த வகையில், வெளிநாட்டில் ஒரு நெடுஞ்சாலையில், மலைப் பாம்பு ஒன்று யாருக்கும் பயப்படாமல் நிதாயனாமாக சாலையில் ஊர்ந்து சென்றுள்ளது. நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து அந்த இடத்தில் வாகனங்கள் எதுவும் வேகமாக வரவில்லை. ஆனால், அதற்கு பிறகு வந்த வாகன ஓட்டிகள், மலைப் பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்து வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த மலைப் பாம்பு சாலையைக் கடந்தது. பாம்பு சாலையைக் கடக்கும்வரை வாகனங்கள் சாலையில் வரிசையில் நின்றதால் அப்பகுதியில் டிராஃபிக் ஜாம் ஆனது.
மலைப்பாம்பு சாவகாசமாக சாலையைக் கடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.