மின்னல் வேகத்தில் மானை வேட்டையாடும் மலைப்பாம்பு வீடியோ வைரல்

காட்டில் நீர் தேங்கியிருக்கும் இடத்தில் மான்கள் தண்ணீர் குடிக்கும்போது திடீரென ஒரு மலைப்பாம்பு மானை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்கள் பலரை ஈர்த்துள்ளது.

By: Updated: December 5, 2019, 08:06:22 PM

காட்டில் நீர் தேங்கியிருக்கும் இடத்தில் மான்கள் தண்ணீர் குடிக்கும்போது திடீரென ஒரு மலைப்பாம்பு மானை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்கள் பலரை ஈர்த்துவருகிறது.

பொதுவாக காடுகளில் சிங்கம், புலி போன்ற வேட்டை வனவிலங்குகள் வேட்டையாடுவதை பலரும் வீடியோக்களில் ஆர்வத்துடன் பார்ப்பதைக் காணலாம். வேட்டையாடப்படும்போது, வேட்டை விலங்கின் வேகம், திடீர் தாக்குதல், வேட்டையாடப்படும் விலங்கின் பரிதாப நிலை ஆகியவை பார்வையாளர்கள் இதுபோன்ற வீடியோவை பார்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

சிங்கம், புலி போன்ற வேட்டை விலங்குகளுக்கு நிகராக ஒரு மலைப்பாம்பு தனது இரையாக ஒரு மானை மின்னல் வேகத்தில் பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரையும் பார்க்கத் தூண்டியுள்ளது.

Ever Seen A Python Hunt Before?

Survival of the…quickest?

InUth यांनी वर पोस्ट केले शनिवार, २३ नोव्हेंबर, २०१९

மகாராஷ்டிராவில் உள்ள மத்திய சாந்தா பிரிவின் கண்காணிப்பு கேமராவில் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், நீர் தேங்கி இருக்கும் இடைத்தில் இரைக்காக மறைந்து காத்திருக்கும் ஒரு மலைப்பாம்பு, அங்கே தண்ணீர் குடிக்க வரும் மான் ஒன்றை திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து கவ்வி வேட்டையாடுகிறது.

இந்த வீடியோவை வன அதிகாரி சுசாந்தா நந்தாவால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டரில், “மலைப்பாம்புகள் இரையைத் தாவி அடித்துக்கொல்லும்போது, அவைகள் ஒரு வகையான பதுங்கியிருக்கும் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. மலைப்பாம்புகள் 50 மில்லி விநாடிகளில் மட்டுமே தங்கள் பற்களால் தாக்குகின்றன. ஆனால், மனிதர்கள். ஒருமுறை கண் இமைப்பதற்கு 200 மில்லி வினாடிகளை எடுத்துக்கொள்கின்றனர்.” என்று சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பலராலும் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Python hunting a deer at cesspool in maharashtra video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X