Viral Video: சிங்கம் என்றாலே கம்பீரம், எந்த விலங்கையும் சாதாரணமாக வேட்டையாடும் விலங்கு என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சிங்கத்தையே ஒரு மலைப் பாம்பு சுருட்டி மடக்கி வேட்டையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் கோலோச்சும் யுகத்தில், தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும், வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்கள் என்றால் எக்கச்சக்கமாக நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம், மனிதர்களால் நெருங்கிப் பார்க்க முடியாதா பரங்க காட்டு விலங்குகளை வீடியோவில் நெருக்கமாகப் பார்க்கும்போது ஏற்படுகிற ஆர்வம்தான் காரணம். அதனால்தான், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு போன்ற விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பார்வைகளை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வன விலங்குகளில் வலிமையான விலங்கு என்றால் அது சிங்கம். அதனால்தான், சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று கூறுகிறோம். மலைச் சிங்கமும் அப்படித்தான். மிகவும் வலிமையான வேட்டை விலங்கான சிங்கம் எந்த விலங்கையும் சாதாரணமாக வீழ்த்தி வேட்டையாடும். மலைச் சிங்கத்தைப் பார்த்தாலே பல தாவர உண்ணிகள் விலங்குகள் பயந்துகொண்டு காத தூரம் தெறித்து ஓடும்.
அப்படிப்பட்ட கம்பீரமான மலைச் சிங்கத்தையே சுருட்டி மடக்கி வேட்டையாடி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது ஒரு மலைப் பாம்பு. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு மலைச் சிங்கம் ஒரு பொந்து அருகே ஏதோ இருக்கிறது என்று அறிந்து அதற்கு உள்ளே தலையைவிட்டு பார்க்கிறது. இதைப் பார்ப்பவர்கள் மலைச் சிங்கம் எதையோ வேட்டையாடப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மலைப் பாம்பு திடீரென சீறிப் பாய்ந்து மலைச் சிங்கத்தைக் கவ்வி மடக்கி சுற்றி இருக்குகிறது. நிலைகுலைந்துபோன மலைச் சிங்கம் மலைப் பாம்பின் பிடியில் இருந்து மீள எவ்வளவோ போராடுகிறது. ஆனால், மலைப் பாம்பு மலைச் சிங்கத்தை சுற்றி இருக்குகிறது. தப்பிக்க போராடி தோற்றுப்போன மலைச் சிங்கம் உடல் தளர்ந்து சோர்ந்து அடங்கிப் போகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மலைச் சிங்கத்தையே வேட்டையாடி விட்டதே இந்த மலைப் பாம்பு என்று அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கல். மலைப் பாம்பின் வேகம், அதன் வலிமை பிரமிக்க வைக்கிறது. காட்டுக்கு ராஜா சிங்கம் யாராலும் வெல்ல முடியாது என்று நினைத்திருக்கும்போது ஒரு மலைப் பாம்பு மலைச் சிங்கத்தை சுற்றி வளைத்து வேட்டையாடுவது பயங்கரமாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“