மொத்த டிராஃபிக்கையும் நிறுத்திய 10 அடி மலைப்பாம்பு: அடுத்து என்ன நடக்குது பாருங்க?

மலைப்பாம்பு ஒன்று மும்பையின் பிஸியான நெடுஞ்சாலையைக் கடந்து சென்று கார் அடியில் மறைந்துகொண்டது. அதை பாம்பு பிடிக்கும் குழுவினர் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

By: September 22, 2020, 9:11:41 PM

மும்பை சையான் பன்வேல் நெடுஞ்சாலையைக் கடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒரு காரின் சக்கரத்துக்குள் நுழைந்து புகுந்துகொண்டது.  அதனால்,நெடுஞ்சாலையே டிராஃபிக்கால் ஸ்தம்பிக்க அடுத்து என்ன நடக்கிறது என்று பாருக்கள்.

மும்பை சையான் பன்வேல் நெடுஞ்சாலையைக் கடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒரு காரின் சக்கரத்துக்குள் நுழைந்து புகுந்துகொண்டது.  அதனால், நெடுஞ்சாலையே டிராஃபிக்கால் ஸ்தம்பித்துப் போனது. விரைந்து வந்த பாம்பு பிடிக்கும் குழுவினர் கார் சக்கரத்தைக் கழட்டி மலைப்பாம்பை மீட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையின் சையான் பன்வேல் நெடுஞ்சாலை எப்போதும் வாகன போக்குவரத்துகள் நிறைந்து பிஸியாக இருக்கும். அப்படி பிஸியான நெடுஞ்சாலையை 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒரு வாகன ஓட்டுநர் அப்படியே தனது காரை நிறுத்திவிட்டுள்ளார். நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற மலைப்பாம்பு நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் அடியில் சென்று மறைந்துகொண்டது. இதனால், மும்பை சையான் பன்வேல் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் ஸதம்பித்து நின்றது.

வாகன ஓட்டிகள் மலைப்பாம்பு குறித்து காவல்துறைக்கும் பாம்பு பிடிக்கும் குழுவினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, பாம்பு பிடிக்கும் குழுவினர் இரு சக்கர வாகனத்தில் டிராஃபிக் எல்லாம் தாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் காரின் அடியில் மறைந்திருந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றபோது, அதைப் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், பாம்பு கார் டயருக்குள் உள்பக்கமாக சென்று சுற்றிக்கொண்டிருந்தது. இதையடுத்து, கார் சக்கரத்தைக் கழட்டிய பிறகு, குழுவினர் மலைப் பாம்பை பத்திரமாக மீட்டனர்.

மலைப்பாம்பு ஒன்று மும்பையின் பிஸியான நெடுஞ்சாலையைக் கடந்து சென்று கார் அடியில் மறைந்துகொண்டது. அதை பாம்பு பிடிக்கும் குழுவினர் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Python rescue video goes viral mumbai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X