viral video: ஒரு மலைப் பாம்பு கோபத்தில் வாயைப் பிளந்து தன்னையே கடுமையாகத் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘கோபம் தன்னையே அழித்துவிடும்…’ என்ற பழமொழி மனிதனுக்கு மட்டுமல்ல பாம்புக்கும் பொருந்தும். இந்த வீடியோவைப் பாருங்க.
கோபம் பிறரை மட்டுமல்ல தன்னையே அழித்துவிடும் என்பது பழமொழி. கோபம் மிகவும் தீமையான ஒரு பழக்கம். ஆனால், எங்கே கோபப்பட வேண்டுமோ அங்கே கோபப்பட வேண்டும். அதனால்தான், மகாகவி பாரதியார் ரவுத்திரம் பழகு என்று கூறினான்.
கோபம் கோபப்படுபவருக்கு நன்மை செய்வதில்லை. கோபம் யார் மீது காட்டப்படுகிறதோ அவருக்கும் நன்மை செய்வதில்லை. இருவருக்கும் அது தீமையைத்தான் செய்கிறது.
கோபத்தில் இன்னொரு ஒரு வித்தியாசமான ஒரு வகை இருக்கிறது. அது தன் மீதே கோபப்படுவது. மிகவும் ஆபத்தானது. பிறர் மீது கோபப்பட்டாலே தன்னை அழித்துவிடும் என்றால், தன் மீதே கோபப்பட்டால் அதுவும் அழிவையே ஏற்படுத்தும்.
அப்படி ஒரு மலைப் பாம்பு கோபத்தில் வாயைப் பிளந்து கடுமையாகத் தன்னையே தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு வாகனத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மலைப்பாம்பு கடுமையான கோபத்துடன் வாயைப் பிளந்து வேகமாக தன்னையே தாக்கிக் கடிக்கிறது. அப்படி இரண்டு முறை வேகமாகத் தாக்கிக் கடிக்கிறது.
மலைப் பாம்பு கோபமாக தன்னையே தாக்கிக் கடிக்கிற வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி டாக்டர் சாம்ராட் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் இந்த வீடியோ பற்றி குறிப்பிடுகையில், “கோபம் தன்னையே அழித்துவிடும்; அது எந்த பிரச்சனையையும் தீர்க்காது…” என்று குறிப்பிட்டு பாம்பு கோபத்தில் தன்னையே தாக்கிக்கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
‘கோபம் தன்னையே அழித்துவிடும்…’ என்ற பழமொழி மனிதனுக்கு மட்டுமல்ல பாம்புக்கும் பொருந்தும். அதனால், நீங்களும் கோபப்படாதீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"