கோவை உணவுத் திருவிழாவில், முதல் நாளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், உணவு பரிமாறும் ஒரு இடத்தில் பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது பெரியவர்கள் இளைஞர்களை அவமதிக்கும் விதமாகப் பேசியுள்ளனர்.
கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) இன்றும் (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இதற்கு பெரியவர்களுக்கு 799 ரூபாய் குழந்தைகளுக்கு 499 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக டிக்கெட்டுகளை புக் மை ஷோ மூலமாகவே பெற முடியும், ஒரு நபர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்து விட்டால் அன்லிமிடெட் முறையில் சாப்பிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உணவு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருகை புரிந்து உணவுகளை ருசித்தனர். முதல் நாளான நேற்று அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்ட நிலையில் உணவு பரிமாறும் ஒரு இடத்தில் பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது பெரியவர்கள் இளைஞர்களை அவமதிக்கும் விதமாகப் பேசியுள்ளனர்.
அதேசமயம் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உணவை கேட்டாலும் தர மறுப்பதாகவும் கெஞ்சி கெஞ்சி வாங்க வேண்டி இருப்பதாகவும் இங்கு தரும் பணத்திற்கு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம், உணவும் பாதி வெந்தும் வேகாமலும் ருசியில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“