முதன்முறையாக தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.. உணர்ச்சி பொங்கும் பதிவு!

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ராதிகா மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பது ரசிகர்களின் கருத்து.

நடிகை ராதிகா முதன்முறையாக தனது தாயின் இளமைக்கால புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகாவின் தாயார்:

கிழக்கே போகும் ரயில் .. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிப்பு இமயம் ராதிகாவை முதன்முறையாக இந்த படத்தில் தான் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலியே நடிப்பு, நடனம், என அசத்திய ராதிகாவுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது.”எம்.ஆர்.ராதாவின் பொண்ணுனா சும்மாவா” என்பது தான்  இயக்குனர்கள் உட்பட பலரின் பாராட்டுக்களாக இருந்தது.

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒருவலம் வந்தார் ராதிகா. குறிப்பாக கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய அதிக படங்களில் ராதிகா நடித்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ராதிகா மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பது ரசிகர்களின் கருத்து.

திரைப்படங்களில் வெற்றிக்கொடியை நாட்டிய அவர்,சின்னத்திரையும் விட்டு வைக்கவில்லை. பிரபல தொலைக்காட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக வலம் வந்தவர் இவர் மட்டுமே.

ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் தாயாரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ராதிகா முதன்முறையாக தனது தயாரின் இளமைக்கால புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது தாயாரின் பிறந்த நாள் அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர்,தன்னுடைய பலத்திற்கு காரணமே தனது தாயார் தான் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close