ஒரே நாளில் ட்விட்டரில் வைரல் நாயகனான தங்கபாலு.. அந்த மொழி பெயர்ப்பு தான் காரணமா?

நரேந்திர மோடி தமிழ் மக்களின் எதிரி

thanagabalu translation video : நேற்றைய தினம் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை தமிழில் மொழிப்பெயர்த்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு ஒரே நாளில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஒட்டு மொத்த சமூகவலைத்தளங்களிலும் வைரல் நாயகனாக மாறியுள்ளார். அதற்கு காரணமான வீடியோ இதுதான்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தடைந்தார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல், செய்தியாளர்களுடன் சந்திப்பு என அனைத்தையும் முடித்துவிட்டு, நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் ஆங்கிலத்தில் பேச, அவருக்குக் மொழிபெயர்த்தார். தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பது என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பவர் எச்.ராஜா தான். ஆனால் நேற்று நடந்த சம்பவத்தின் மூலம் தங்கபாலு, எச் ராஜாவை ஓவர் டெக் செய்து விட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி தனது மனதில்பட்ட விஷயங்களை மக்கள் முன்னிலையில் தைரியமாகப் பேசினார், ஆனால் அவர் பேசியதற்குத் துளியும் சம்மந்தம் இல்லாதவற்றை மொழிபெயர்த்துக் கூறியுள்ளார் தங்கபாலு.

ராகுல் காந்தி, “காங்கிரஸ் தமிழக மக்களை நேசிக்கிறது” என்று கூற, அதற்கு “நாம் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம், நமது வலிமையை வளமான நேரத்தில் காட்டுவோம்” என்று தங்கபாலு தெரிவித்தார். அதன்பின் ராகுல் காந்தி, “நரேந்திர மோடி ஜம்மு&காஷ்மீர் இன்சூரன்ஸ் உரிமையை அம்பானிக்குக் கொடுத்துவிட்டார்” என்று கூற, அதற்கு “ஜம்மு&காஷ்மீரை அம்பானிக்குக் கொடுத்துவிட்டார்” என்று தங்கபாலு தெரிவித்தார்.

இவை அனைத்தையும் விட, ராகுல் காந்தி “நாங்கள்(காங்கிரஸ்), தமிழ் மக்களை மதிக்கிறோம்” என்று கூற, அதற்கு “நரேந்திர மோடி தமிழ் மக்களின் எதிரி” என்று மாற்றிக் கூறிவிட்டார்.

இதில் மற்றொரு ஹைலேட் என்னவென்றால், of course, நம்மை கலைஞர், காமராஜர் போன்ற பெரிய தலைவர்களுடன் ஒப்பிட முடியாது என்ற ராகுல்காந்தியின் உரையை, நான் தலைவர் கலைஞர் அவர்களை காமராஜருடன் ஒப்பிட மாட்டேன் என மொழிப்பெயர்த்து அனைவரையும் கொதிப்படையச் செய்தார். இதனைத்தொடர்ந்து அவரின் மொழிப்பெயர்ப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close