scorecardresearch

ராகுல் – பிரியங்கா குல்மர்க்கில் பனி ஸ்கூட்டர் சவாரி; வைரல் வீடியோ

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி இருவரும் காஷ்மீரில் உள்ள குல்மர்க்கில் பனி ஸ்கூட்டர் ஓட்டிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

Rahul and Priyanka Gandhi ride snow scooters in Gulmarg, Kashmir, ராகுல் - பிரியங்கா குல்மர்க்கில் பனி ஸ்கூட்டர் சவாரி, வைரல் வீடியோ, Rahul Gandhi skiing, Kashmir, snow scooter, viral, trending, Tamil indian express

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி இருவரும் குல்மர்க்கில் பனிஸ்கூட்டரை மாறி மாறி ஓட்டுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பனி ஸ்கூட்டரில் (ஸ்னோ ஸ்கூட்டர்) சவாரி செய்து மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பனி ஸ்கூட்டரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து மாறி மாறி பனி ஸ்கூட்டர் ஓட்டுகின்றனர். பனிசூழ்ந்த பிரதேச குல்மர்க்கில் பல ஸ்கூட்டர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பனி ஸ்கூட்டரில் சென்றனர். 101 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி மற்று பிரியங்கா காந்தி உடன்பிறப்புகள் இருவரின் இந்த சந்தோஷமான பனி ஸ்கூட்டர் சவாரிக்கு பெரும்பாலான பார்வையாளர்கள் சாதகமாக கருத்து தெரிவித்தாலும், சிலர் அவர் தீவிரமாக இல்லை என்று கூறி கேலி செய்தனர். “இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டால், எந்த வாக்காளர் ஒரு தலைவரை தீவிரமானவராக எடுத்துக் கொள்வார்?” என்று ஒரு ட்விட்டர் பயனர் (@Vijay_NT2) ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் கடந்த வாரம் தனிப்பட்ட பயணமாக இங்கு வந்து குல்மார்க்கில் முகாமிட்டுள்ளார். வார இறுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்து சேர்ந்தார்.

ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் கடைசி இரண்டு நாட்களில் அண்ணன்-தங்கை இருவரும் காஷ்மீரில் இருந்தனர். அப்போது, ராகுல் காந்தி பனிக்கட்டியை எடுத்து தனது சகோதரி பிரியங்கா காந்தி மீது தூவி விளையாடினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi and priyanka gandhi snow scooter ride in gulmarg video goes viral