Advertisment

காஷ்மீரி மாணவிகளுடன் உரையாடல்: திருமணம் குறித்து மனம் திறந்த ராகுல்; ‘திட்டமிடவில்லை... நடந்தால்...’

கடந்த வாரம் ஸ்ரீநகரில் காஷ்மீரி மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவரது திருமணம் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பேசினார்.

author-image
WebDesk
New Update
Opens up rahul

கடந்த வாரம் ஸ்ரீநகரில் காஷ்மீரி மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். (Image source: @rahulgandhi/Instagram)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீரி பெண்களுடன் உரையாடினார். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் திருமணம் என அவர்களுடன் பல தலைப்புகளில் விவாதித்தார்; திங்களன்று ராகுல் காந்தி பகிர்ந்த வீடியோக்களில், ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரில் இளம் பெண்களுடன் ராகுல் காந்தி பேசுவதைக் காணலாம்.

Advertisment

திங்கள்கிழமை இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ராகுல் காந்தி, “திருமண அழுத்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காஷ்மீரைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் சொல்வதைக் கேளுங்கள்...”

“திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இந்த வீடியோவில் ஒரு மாணவி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்கிறார். “20-30 வருடங்களாக அந்த அழுத்தத்தை நான் முறியடித்திருக்கிறேன்” என்று ராகுல் காந்தி தனது அடையாளமான வெள்ளை டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து, ஒரு பெரிய புன்னகையுடன் கூறுகிறார்.  “ஆனால் அது ஒரு நல்ல விஷயம்” என்று ராகுல் காந்தி கூறினார்.

“சார், நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா?” என்று மற்றொரு மாணவி கேட்கிறார். “ஆமாம், ஆமாம். அதாவது, நான் அதை திட்டமிடவில்லை. ஆனால் அது நடந்தால்…” என்று அவர் பதிலளித்தார்.  “தயவுசெய்து எங்களை அழைக்கவும” என்று மற்றொரு மாணவி கூறுகிறார். “நான் அழைப்பேன்... நான் அழைப்பேன்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.

இந்த வீடியோவில், ​​​​ஒரு மாணவி திருமணம் செய்து கொள்வதற்கான பயத்தைப் பற்றி பேசுகிறார்.  அந்த மாணவி, “எனக்கு வயது 21, நன்றாக இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறேன். நான் இனி வளர விரும்பவில்லை. கொஞ்சம் பயமாக இருக்கிறது” என்று கூறுகிறார்.

“எங்கள் நீதிமன்ற நாட்குறிப்புக்காக நான் கடந்த முறை நீதிமன்றத்தில் இருந்தேன், காஷ்மீரில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவதைக் கண்டேன். எனவே, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது” என்று மற்றொரு மாணவி கூறினார்.

ராகுல் காந்தி காஷ்மீரி மாணாவிகளுடன் உரையாடும் வைரல் வீடியோப் பாருங்கள்:

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளைப் பெற்றது. ஒரு பயனர் எழுதினார், “இத்தகைய வீடியோக்கள் மிகவும் தகவலறிந்தவை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகளுடன் ராகுல் காந்தி இந்த தொடர்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில்,  “காஷ்மீரில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவது குறித்த சிறுமியின் கருத்து பள்ளத்தாக்கிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிகவும் கவலை அளிக்கிறது.” என்று கூறினார்.

“அவர் பரந்த இதயம் கொண்ட உண்மையான மனிதர்! அவர் உரையாடலில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். எந்தத் தலைவரும் தங்கள் மக்களுடன் நன்றாக இணைவதைப் பார்த்ததில்லை” என்று மூன்றாவது பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment