Advertisment

கடும் வெயில் வெப்பம்... பொதுக்கூட்ட மேடையில் தன் மேல் தண்ணீர் ஊற்றிக்கொண்ட ராகுல்: வைரல் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம், தியோராவில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, ​​காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெயில் ரொம்ப சூடாக இருக்கிறது என்று தனது தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
A water RG

“ரொம்ப சூடாக இருக்கிறது” என்று தனது தலை மேல் தண்ணீர் ஊற்றிக்கொண்ட ராகுல் காந்தி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உ.பி.-யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  “ரொம்ப சூடாக இருக்கிறது” என்று கூறி கடுமையான வெப்பத்தைக் குறிப்பிட்டு தனது தலையில் தண்ணீரை ஊற்றினார். வட இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலையுடன் போராடி வருவதால் இப்படி நடந்துள்ளது. வட இந்தியாவில் வெப்பநிலை 48  டிகிரி செல்சியஸுக்கு உயர்ந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rahul Gandhi pours water on himself at UP rally amid intense heatwave: ‘Garmi hai kaafi’. Watch

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் சுர்பி  (@SurrbhiM) என்பவரால் பகிரப்பட்ட வீடியோவில்,  ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசுகிறார். அப்போது, கடுமையான வெப்பத்தைக் குறிப்பிட்டு, தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, மீதமிருந்த தண்ணீரைக் வெப்பத்தை தணிக்க அவரது தலையில் ஊற்றுகிறார். ராகுல் காந்தியின் இந்த செயல் பொதுக்கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களிடமிருந்தும் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை 5,000க்கும் மேற்பட்டவரக்ள் பார்த்துள்ளனர்.

வீடியோவில், பொதுக்கூட்ட மேடையில் ராகுல் காந்தி பேசும்போது, ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, பார்வையாளர்களிடம்  “ரொம்ப சூடாக இருக்கிறது” என்று  இந்தியில் கூறினார். இதைத் தொடர்ந்து, பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் தலையில் ஊற்றியதால், கூட்டத்தினரிடையே ஆரவாரம் ஏற்பட்டது.

பான்ஸ்கான் தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சதால் பிரசாத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இத்தொகுதியில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

காந்தியின் நடவடிக்கைகள் வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்றன. அங்கே கடுமையான வெப்பம் மற்றும் வெப்பக் காற்று மக்களின் துன்பத்தை மோசமாக்கியது. உத்தரபிரதேசம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்கள் சமீபத்திய ஆண்டுகளில் காணாத அளவில் மிக உயர்ந்த வெப்பநிலையை எதிர்கொள்கின்றன.

ரொம்ப சூடாக இருக்கிறது என்று ராகுல் காந்தி தனது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்ட வீடியோவைப் பாருங்கள்: 

உத்திரபிரதேசம் முழுவதும் வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உ.பி மாநிலத்தின் பிரயாக்ராஜ் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 48.8 டிகிரி செல்சியஸைப் பதிவுசெய்தது. அதே நேரத்தில், அண்டை மாநிலமான டெல்லியில் புதன்கிழமை 52 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்தது. இந்த பருவத்தில் தலைநகரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது. ஆக்ரா-தாஜ் (48.6 டிகிரி செல்சியஸ்), பீகாரில் டெஹ்ரி (47 டிகிரி செல்சியஸ்), உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் (48.2 டிகிரி செல்சியஸ்) - 10 வானிலை நிலையங்கள் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி (49 டிகிரி செல்சியஸ்), ஹரியானாவில் நர்னால் (48.5 டிகிரி செல்சியஸ்), அயநகர்-டெல்லி (47.6 டிகிரி செல்சியஸ்), புது டெல்லி-ரிட்ஜ் (47.5 டிகிரி செல்சியஸ்), மத்தியப் பிரதேசத்தில் ரேவா (48.2 டிகிரி செல்சியஸ்), ரோஹ்தக் ஹரியானாவில் (48.1 டிகிரி செல்சியஸ்), மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் (47.2 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment