பள்ளி மாணவியுடன் ராகுல் காந்தி புஷ் அப் சவால் – வீடியோ வைரல்

இந்த மூன்று நாள் தமிழக மக்களுடனான சுற்றுப்பயணம் மிகவும் சிறந்ததாகவும் தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கன்னியாகுமரி முலகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது, ஒரு ஜூடோ மாணவயின் வேண்டுகோளுக்கு இணங்க ராகுல் காந்தி புஷ் அப் சவாலில் ஈடுபாட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  அதேநாளில் கேரள மாநில சட்டப்பேரவைக்கும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையான தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

நேற்று, கண்ணியாகுமாரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கன்னியாகுமரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கன்னியாகுமரி முலகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சற்றும் முகம் சுளிக்காமல் பதிலளித்தார்.

 

மீண்டும் சுதந்திரப் போராட்டம் தேவையா என்ற  ஒரு கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும்; அது ஒரு அறப்போராட்டமாகவே இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல், ” 130 கோடி மக்கள் வாழும் இந்தியா வெவ்வேறு கருத்துக்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகளைக் கொண்டுள்ளது. அப்படியிருக்கையில், எல்லா சிந்தனைகளும்  உங்களிடமிருந்து வர வேண்டும் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? மக்கள் விரும்புவதை புரிந்து கொள்ள நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை” என்று பதிலளித்தார்.

இந்த மூன்று நாள் தமிழக மக்களுடனான சுற்றுப்பயணம் மிகவும் சிறந்ததாகவும் தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rahul gandhi push up challenge rahul gandhi election viral videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com