Advertisment

கோவை பொதுக்கூட்டம்; ஸ்பார்டன்ஸ் பட வசனத்துடன் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி

ஸ்டாலின் உடன் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்; ஸ்பார்டன்ஸ் பட வசனத்துடன் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி; இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
stalin and rahul

ஸ்டாலின் உடன் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்; ஸ்பார்டன்ஸ் பட வசனத்துடன் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி; இணையத்தில் வைரல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட வீடியோவை ’ஸ்பார்டன்ஸ்’ பட வசனத்துடன் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பரப்புரை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க கட்சிகளின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 12) கோவையில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினர். 

இந்தநிலையில், ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவை பொதுக்கூட்ட நிகழ்வை, பிரபல ஆங்கில படமான ’ஸ்பார்டன்ஸ்’ பட வசனங்களின் பின்னணியில், வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ”புயல் எழுகிறது - வெறுப்பை வெளியேற்றி மீண்டும் இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் புயல்” என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Rahul Gandhi Instagram kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment