ஓடும் ரயிலில் இருந்து தாவிய பயணி .. கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே போலீசார்

கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

author-image
WebDesk
New Update
Velankanni special train stops suddenly.. Passengers suffer

நாகர்கோவில்- வேளாங்கண்ணி ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் மூலம் கோயமுத்தூர் திரும்பியிருக்கின்றார். கோயமுத்தூரில் இறங்க வேண்டிய அவர் உறங்கிவிட்டார். பிறகு திடீரென விழித்த அவர், கோவை ரயில் நிலையம் வந்ததை அறிந்து, ஓடும் ரயிலிலிருந்து தாவினார். இதில் நிலை தடுமாறி, தண்டவாளத்துக்கு அடியில் விழுந்தார்.

Advertisment

அப்போது பணியில் ரோந்து சென்ற ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ், காவலர் மாரிமுத்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த நபரை கண் இமைக்கும் நேரத்தில் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றினர்.

இதனால் சிவகுமார் அதிர்ஷ்டவசமாக  உயிர்தப்பினார். அவரை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment
Advertisements

கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

செய்தி பி.ரஹ்மான்: கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: