‘Incredible!!’: Netizens go wow over Railway employee ‘giving tickets to 3 passengers in 15 seconds’: பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால், ரயில் நிலையங்கள் பரபரப்புடன் காணப்படுகின்றன. இருப்பினும் ரயிலில் பயணிக்கும் முன் மக்கள் டிக்கெட்டுகளை தவறவிடாமல் வாங்குவதைக் காணலாம். ஆனால், டிக்கெட் வாங்குவதற்கான நீண்ட வரிசைகள் மற்றும் டிக்கெட்டுகளை வாங்க செலவிடும் நேரமும் பயணிகளை அடிக்கடி அலைக்கழிக்கிறது.
டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் வரிசையில் நிற்பதைக் குறைக்கும் முயற்சியில், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் பயணிகளுக்கு இயந்திரங்களிலிருந்து டிக்கெட்டுகளைப் பெற உதவுவதற்கு வசதியாக பணியமர்த்தப்பட்டனர்.
தற்போது, ரயில்வே ஊழியர் ஒருவர் தனது டிக்கெட் கொடுக்கும் பணி வேகத்தின் மூலம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஒரு வைரலான வீடியோவில், அந்த நபர் மின்னல் வேகத்தில் இயந்திரத்தை இயக்குவதும் பயணிகளுக்கான டிக்கெட்டுகளை உருவாக்குவதும் காணப்படுகிறது. அவர் கேமராவைப் பார்த்து சிரித்துவிட்டு, ரிட்டன் டிக்கெட் தானா என்ற பயணியின் கேள்விக்கு, தமிழில் “ஆம்” என்று பதிலளித்தார்.
மும்பை ரயில்வே பயனர்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 8,96,700 பார்வைகளைக் கடந்துள்ளது. ட்வீட்டில் ஊழியரின் டிக்கெட் கொடுக்கும் வேகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 15 வினாடிகளில் மூன்று டிக்கெட்டுகளை வழங்குகிறார். "இந்திய ரயில்வேயில் எங்கோ இந்த நபர் 15 வினாடிகளில் 3 பயணிகளுக்கு டிக்கெட்டுகளை மிக வேகமாக வழங்குகிறார்" என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என ட்விட்டர் பயனர் ஒருவர் அடையாளம் காட்டினார். “இந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஜென்டில்மேன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிகிறார். ஏறக்குறைய 3.15 நிமிட வீடியோ ஆனால் 02.20 நிமிடங்களுக்கு மட்டுமே உள்ளது,” என்று பயனர் எழுதினார்.
மற்றொரு பயனர், சென்னை கோட்ட ரயில்வே மேலாளரை டேக் செய்து, "@DrmChennai இதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வீடியோ சென்னை பார்க் ஸ்டேஷனில் இருந்து வந்தது தானே” என கேட்கிறார். டிஆர்எம் சென்னை வீடியோவை ஒப்புக்கொண்டு, “பார்த்தேன். நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.