Advertisment

ரயில் என்ஜினில் ஏறிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஊழியர் - ஷாக் வீடியோ

இளைஞரை காப்பாற்றும் வீடியோவை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
ரயில் என்ஜினில் ஏறிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஊழியர் - ஷாக் வீடியோ

ரயில்வே ஊழியரின் துரித முயற்சியால், ரயில் என்ஜினில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் காப்பாற்றப்பட்டார். இளைஞரை காப்பாற்றும் வீடியோவை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. இச்சம்பவம் பீகாரில் உள்ள டானாபூர் ரயில் நிலையத்தில் நடத்துள்ளது.

Advertisment

29 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ரயில் என்ஜின் மேல் ஏறும் ரயில்வே ஊழியர் ஒருவர், அங்கிருக்கும் நபர் மீது சால்வையை வீசுவதை காணமுடிகிறது. என்ஜின் மேற்பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பியும் காணப்படுகிறது.

தொடர்ந்து, என்ஜின் மேலே இருந்த அந்த நபரை ஊழியர் கீழே இழுக்கிறார். கீழே நடைமேடையில் விழுந்த இளைஞர், சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வீடியோவை பகிர்ந்த அமைச்சகம், இந்திய ரயில்வே ஊழியர்கள் மனிதாபிமானத்திற்கும் மனசாட்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். இளைஞரை காப்பாற்றியது, டிக்கெட் சோதனை செய்யும் ஊழியர் என குறிப்பிட்டிருந்தனர். இளைஞரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மற்றொரு நிகழ்வில், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்த பயணியை காப்பாற்ற, வேகமாக பிரேக் போட்ட ரயில் மேலாளர் பாராட்டுகளை பெற்றார். குஜராத்தில் சூரத் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவையும் ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

தற்கொலை எண்ணங்கை கைவிட கீழே உள்ள என்ஜிஓ அமைப்பின் உதவியை நாடுங்கள்

Sneha – 91-44-2464 0050, 91-44-2464 0060
E-mail – help@snehaindia.org
Address – #11, Park View Road
R.A. Puram
Chennai 600028

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment