ஒரு பெண் தனது செல்ல நாயுடன் ரயிலில் பயணிக்கும் வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த வீடியோ 27 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது.
உங்கள் செல்ல நாய்களுடன் இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய ரயில்வேயானது செல்லப்பிராணிகளை ஏசி முதல் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கிறது. முழு பெட்டியும் பயணிகள் அல்லது பயணிகள் குழுவால் பிரத்யேக பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் ரயிலில் தனது செல்ல நாயுடன் பயணிக்கும் வீடியோ காட்சிக்கு பதிலளித்தார். ஜோராவர் என்ற லாப்ரடார் நாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட thepawfectzazu என்ற பக்கத்தில் இந்த வீடியோ முதலில் Instagram இல் வெளியிடப்பட்டது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ ட்விட்டருக்கு வருவதற்கு முன்பே 27 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
“ரயில் பயணம் மிகவும் நிம்மதியாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை” என்று வீடியோவில் ஒரு குரல் கூறுகிறது. ஒரு பெண் போர்வைக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதையும், யாரோ அவரைத் தட்டுவதைப் போலவும், அவள் விழித்தெழுந்து பார்த்தால், ரயில் பெட்டியில் தன் அருகில் உறங்கும் தன் செல்ல நாய் குட்டி இர்க்கிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து, “உங்கள் சேவையில் இந்திய ரயில்வே 24×7” என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:
“எப்போதும் சிறந்த விஷயம்! இந்திய இரயில்வேயில் நாய்களை அழைத்துச் செல்வது பற்றிய பல இன்ஸ்டா பதிவுகளை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு பெண் 3 நாய்க்குட்டிகளை எடுத்து வளர்க்கிறார். அவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு முழுவதும் பயணம் செய்கிறார்கள். அவரது பதிவுகள் ஆச்சரியமாக இருக்கிறது” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஏசி முதல் வகுப்பில், அனைத்து 2 (கூபே) அல்லது 4 (கேபின்) இருக்கைகளும் உங்களுடையதாக இருந்தால் மட்டுமே செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படும், இதனால் மற்ற பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாது. தடுப்பூசி மற்றும் உடற்தகுதி சான்றிதழ்கள் செல்லப்பிராணிகளை முன்பதிவு செய்வதற்கு முன் சரிபார்க்கப்படுகின்றன” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, பர்ஷா தீக்ஷித் என்ற பதிவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது இரண்டு நாய்களுடன் எப்படி பயணம் செய்தார் என்பதைக் காட்டினார். தீக்ஷித் குறிப்பிடுகையில், “உங்கள் செல்லப்பிராணிகளை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேதான் சிறந்த [வழி] போக்குவரத்து; இது நிறைய நிறுத்தங்களை எடுக்கும்; [நன்றாக காற்றோட்டம் உள்ளது மற்றும் செல்லப் பிராணிகளுக்கு நிறைய இடம் உள்ளது.” என்று குறிபிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“