New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/Ry2WFk65A0ifTI2SHn4s.jpg)
தியேட்டருக்குள்ளே பெய்த மழை.. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள்!
கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மழைநீர் கொட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் சிலர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
தியேட்டருக்குள்ளே பெய்த மழை.. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள்!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் திரைக்கு வரும் படங்களுக்கு மக்கள் வரவேற்பு அதிகம். நடுத்தர வர்க்கத்தினர் மாதத்தில் ஒன்று (அ) 2 முறை தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படம் வெளியாகும்போது குடும்பத்தினருடன் சென்று படம் பார்க்க விரும்புவார்கள். அந்த வகையில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள திரையரங்கமும் தனி சிறப்பை தாங்கி நிற்கிறது. நவீன காலத்திற்கு ஏற்ப திரையரங்குகளும் புதுப்பித்து புதுப்பொழிவை கொண்டு இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அப்படி, திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு புதிய அனுபவத்தை நவீன கால தியேட்டர்கள் கொடுத்து வருகிறது. பல ஸ்கிரீன்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்துவிட்டன. மக்கள் அதிகம் செல்லும் மால்களிலும், இவை பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.
அந்த வரிசையில், கோவை அவிநாசி சாலையிலுள்ள பிராட்வே சினிமாஸ் தென் இந்தியாவிலேயே லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கம் முதல் முறையாக அமைக்கப்பட்டது. அதிலும், ஐமேக்ஸ் லேசர் என்பது 12 சேனல் கொண்ட ஒலி அமைப்பு கொண்டு உள்ளதோடு, துல்லியமான கிரிஸ்டல் கிளியர் படங்களை பார்ப்பதற்கான புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் 18ஆம் தேதி கோவையில் பெய்த கனமழையில் திரையரங்கிற்குள் அருவியில் கொட்டுவது போல கூரையில் இருந்து மழைநீர் தியேட்டர் உள்ளே கொட்டியது. இதன் காரணமாக திரையரங்க வளாகத்திற்குள் ஏசி வழியாக புகுந்த மழைநீர் திரையரங்கினுள் கொட்டியது. இதனால், அவதியடைந்த பார்வையாளர்கள் உடனடியாக திரையரங்கை விட்டு வெளியேறினர். மேலும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தியேட்டருக்குள்ளே பெய்த மழை.. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள்!#Coimbatore #Avinasi pic.twitter.com/CPnFzWRNN7
— Indian Express Tamil (@IeTamil) May 20, 2025
திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி வசதியாக அமர்ந்து பார்க்கவந்தவர்களுக்கு இதுபோன்று சவரில் குளித்தது போன்று நனைந்து விட்டோம் என வருத்தப்பட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.