ரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்... அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க...

இந்த ஒரு ட்ரிப்புக்கு அவர் செலவிட்ட தொகை 4 லட்சமாம்...

இந்த ஒரு ட்ரிப்புக்கு அவர் செலவிட்ட தொகை 4 லட்சமாம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajasthan Government School teacher books helicopter on his retirement day

Rajasthan Government School teacher books helicopter on his retirement day

Rajasthan Government School teacher books helicopter on his retirement day : ராஜஸ்தானை சேர்ந்த ஆசியரியர் ஒருவர் தன்னுடைய பணி ஓய்வு பெறும் நாளில், வீட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார் ரமேஷ் சந்த் மீனா. அவருடைய வீடு, அவர் பணி புரியும் பள்ளியில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.

Advertisment

அவருடைய வாழ்நாள் ஆசையெல்லாம், ஒரு நாளாவது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும் என்பது தான். தன்னுடைய பணி ஓய்வு நாளான சனிக்கிழமையன்று (31/08/2019) ஹெலிகாப்டர் புக் செய்து, அதில் தன் மனைவி மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் முன்பு தரையிறங்கியுள்ளார் ரமேஷ் சந்த். தன்னுடைய ஆசை மட்டும் அல்ல அது. அது அவருடைய மனைவியின் ஆசையுமாம்.

Rajasthan Government School teacher books helicopter on his retirement day

34 வருடங்களாக அரசு பள்ளியில் சமூகவியல் துறை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வெறும் 18 நிமிடங்கள் பயணத்திற்கு செலவிட்ட தொகை 4 லட்சமாம். இவரின் இந்த ஆசையை நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் பெரிய செய்தியாக மாற, நெட்டிசன்கள் அவருடைய செயலுக்கு பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

Advertisment
Advertisements

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: