இதனால் தான் இவர் என்றுமே சூப்பர் ஸ்டார்... வாழ்த்து மழையில் நனையும் ரஜினிகாந்த்!

Happy Birthday Rajinikanth: ரசிகர்கள் அவரை ரசிப்பதற்கு இப்படி பல நூறு காரணங்களை சொல்லுகின்றனர்.

”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில்  ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்  அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என கோஷங்களை எழுப்ப வைக்கிறார் என்றால் அதற்கு அந்த மனிதர்  எவ்வளவு மனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

சொல்லிக்கும்படி  அவ்வளவு அழகு இல்லை..  நிறமோ கறுப்பு தான்.  பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்த பிம்பமும் இல்லை. ஆனாலும் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு அதில் நேர்மையாக செயல்பட்டு இன்று  கடைக்கோடியில் இருக்கும் தமிழர்களுக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று தெரியும்படியான உயரத்திற்கு சென்று இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதில் கடின உழைப்புக்கே அதிகம் பங்கு  கொண்டு.

தனக்கென்று தனி ஸ்டைல்,  பேச்சிலும் தனக்கென தனி பாணி,  தப்போ, சரியோ துணிந்து கேட்கும் ஒருவித துணிச்சல்,  ஆன்மீகத்தில் அளவுக்கு அதிமான நாட்டம் என  ரஜினியின் ரசிகர்கள் அவரை ரசிப்பதற்கு இப்படி பல நூறு காரணங்களை சொல்லுகின்றனர்.

சரி, ரசிகர்கள் தான் இப்படி சொல்லுகிறார்கள் என்றால், அவருடன் இணைந்து தமிழ் சினிமாவை வளர்த்துக் கொண்டிருக்கும் சக நடிகர்- நடிகைகளும் சொல்லும் காரணம் ஆயிரத்தை தாண்டுகிறது.  நல்ல மனிதர், சிறந்த அப்பா, திறமையான நடிகர்,  ஸ்டைல் மன்னன்,   ரசிகர்களை ரசிக்கும் தலைவன் என சொல்லிக் கொண்டே போகிறார்கள்.

சொல்வது மட்டுமில்லை அவரின் பிறந்த நாளில் இணையத்தையே ஒரு வழியும் செய்திருக்கிறார்கள்.

Tamil Cinema Superstar ‘Rajinikanth’ Turned 68 Today:இதோ  ரஜினியை வாழ்த்து மழையில் நனைத்து வைத்த திரைப்பிரபலங்கள் லிஸ்ட்.

1. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

வாழ்த்து சொன்ன நண்பருக்கு உடனே பதில் கொடுத்தார் சூப்பர் ஸ்டார்.

2. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்:

அவருக்கும் ரஜினி கொடுத்த பதில் இதுதான்

3. பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். அவருக்கும் பதில் கூறினார் ரஜினிகாந்த்.

4. திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினிகாந்திற்கு கூறிய பிறந்த நாள் வாழ்த்து

5. உலக நாயகனும், ரஜினியின் நீண்ட கால நண்பரும் ஆகிய கமல்ஹாசன் போட்ட ட்வீட்

நண்பனுக்கு உடனே நன்றி கூறிய ரஜினிகாந்த்

6. வாழ்த்து சொன்ன நடிகர் விஜய் சேதுபதி

7. நடிகர் ரஜினிகாந்தின் அதிதீவிர ரசிகர் நடிகர் ஜீவா

8. நடிகை கஸ்தூரி


>

9. நடிகர் உதயநிதி ஸ்டாலின்

10. நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் வாழ்த்து

11. ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் ஸ்பெஷல் மெசேஜ்

12. சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்திய லேடி சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த தான் தன்னுடைய குரு என கூறி தலைவா என அழைத்து சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close