Advertisment

ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு; திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் ஆரவாரம்: வைரல் வீடியோ

ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போது திருவனந்தபுரத்தில் திரண்ட ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
viral

ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு; திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் ஆரவாரம்: வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போது அங்கே திரண்ட ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவர் 170' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் உடன் நட்சத்திர பட்டாளங்களும் இணைந்ததால் 'தலைவர் 170' படம் இருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பை சிறப்பு மதுரா விழாவுடன் கேரளாவில் தொடங்கினார். ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும்பொது படப்பிடிப்பு தளத்தில் திரண்ட ரசிகர்கள் தலைவர், ரஜினிகாந்த் என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்கிறார்கள். அந்த வீடியோவில், ரஜினிகாந்த் காரில் சன் ரூஃபில் நின்று கொண்டு வருகிறார். அவைப் பார்த்த ரசிகர்கள்உற்சாக ஆரவாரம் செய்கிறார்கள். அப்போது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ந்த ரஜினிகாந்த், அனைவரையும் பார்த்து கைகளை அசைத்தும் கைகளை தலைக்கு மேல் கூப்பியும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ. ஞானவேல் எழுதி இயக்குகிறார். திருவனந்தபுரம் புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வரவிருக்கும் படம் மக்களுக்கு செய்தி சொல்லும் ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment