ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினியை கொண்டாடும் ரசிகர்கள்... வைரல் வீடியோ

ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பியபோது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

காலா படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக ஜூன் 6ம் தேதியே டார்ஜிலிங் சென்றார் ரஜினிகாந்த். டார்ஜிலிங் மற்றும் டேராடுன் பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.

ஒரு மாதம் பிறகு, சூட்டிங் முடித்து டார்ஜிலிங்கில் இருந்து நேற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்தை வரவேற்க அவரது ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரை வரவேற்ற வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் ரஜினியை ‘தலைவா… தலைவா’ என்று மகிழ்ச்சியில் கோஷங்கள் எழுப்பியும், கைக் குலுக்கியும் வரவேற்றனர். மேலும் டுவிட்டர் முழுவதும் ‘தலைவர் ரிட்டர்ன்ஸ்’ என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆனது. சென்னை விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்ற ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

×Close
×Close