New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Rajiniknath-Keerthy-Suresh.jpg)
மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த், படத்தில் நடித்த வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், கீர்த்தி சுரேஷ் பெயரைக் குறிப்பிடாதது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த், படத்தில் நடித்த வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், கீர்த்தி சுரேஷ் பெயரைக் குறிப்பிடாதது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாதி பாகுபாடுகளை சாடும் மாமன்னன் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாமன்னன் படத்தைப் பாராட்டி, இதில் நடித்துள்ள வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#MAAMANNAN
— Rajinikanth (@rajinikanth) July 4, 2023
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Neengalum keerthy ya pathi sollave illaiyye 🥺@KeerthyOfficial @rajinikanth
— சந்ரு ✨ (@ChandruSscv) July 5, 2023
மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தபோதும், வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ் பெயரைக் குறிப்பிடாமல் விட்டது ஏன் என்று நெட்டிசன்கள், கீர்த்தி சுரேஷுக்கு ஆதரவாக “நானும் நடிச்சிருக்கேன்னு சொல்லுங்கய்யா அவருக்கு” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
Sir Keerthy Suresh eh marantinga🥲
— Krithik (@oops019) July 4, 2023
ரஜினிகாந்த் மாமன்னன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தபோது, கீர்த்தி சுரேஷ் பெயரைக் குறிப்பிடாமல் விட்டது குறித்து ரஜினியின் வாழ்த்து ட்வீட் பதிவில் கம்மெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Keerthy akka pathi sollale 👀
— Cric Irfan (@Irfan_irru_17) July 4, 2023
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால், அவருடைய பெயரை எப்படி குறிபிடாமல் விட்டார் என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
@KeerthyOfficial intha movie la irukanga🤣
— Ganeshpandi (@GaneshpandiGan4) July 4, 2023
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.