New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/llan.jpg)
ரஜினிகாந்த்
யார் காலில் விழலாம் என்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் முன்பு பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்
யார் காலில் விழலாம் என்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் முன்பு பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினி நடித்து, நெல்சன் இயக்கிய ’ஜெயிலர்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாக ரஜினி இமயலைக்கு பயணம் சென்றார். இந்நிலையில் இந்த பயணத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து அவர் காலில் விழுந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டார் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா என்று பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் முன்பு காலில் விழுவது தொடர்பாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : முதலில் நாம் 3 பேர் காலில் விழுவ வேண்டும் . உயிர் கொடுத்த கடவுள், காலில் விழலாம். இந்த உயிருக்கு உயிரூட்டி, இந்த உடலை கொடுத்த பெற்றோர் காலில் விழலாம். பெரியவர்கள் காலில் விழலாம். பெரியவர்கள் கடினமான பாதையில் கடந்து வந்தவர்கள். அந்த பாதையில்தான் நாம் பயணிக்கப் போகிறோம் என்பதால் பெரியவர்கள் காலில் விழலாம்.
பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்களின் பாதங்களில் விழக்கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்று பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.