அரசியலுக்கு வாங்க ரஜினி - ட்விட்டரை கலக்கிய ஹேஸ்டேக்

rajinikanth politics memes : அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

rajinikanth politics memes : அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
Rajinikanth decision on politics other political leaders reaction tamil news

Rajinikanth decision on politics

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமெனச் சென்னையில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தலைவா இது போன்று மக்கள் ஆதரவு, அன்பு, எழுச்சி இதுவரை யாருக்கும் இருந்ததில்லை. தமிழகம் காக்க வாருங்கள் என்று ரஜினி ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில் கருத்துய் தெரிவித்தார்.

இதையெல்லாம் வேறு கட்சிகளின் தொண்டர்களிடம் எதிர்பார்க்க முடியாது, குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கண்ட்ரோல் செய்து சாதிக்க முடியும் னா வேற லெவல் தலைவரின் பெயர் ஒன்றே போதும். அவர் பெயரைச் சொன்னாலே அனைவரும் கட்டுப்படுவர் என்று மற்றொரு ரசிகர் தெரிவத்தார்.

அரசியலுக்கு வரப்போதில்லை என்ற முடிவினை மறுபரிசீலனை செய்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகர்கள்,தமிழக மக்களும் வள்ளுவர்கோட்டத்திலிருந்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு கவனமாக செல்லுங்கள் என்று சொல்லுங்க தலைவா என உணர்வுபூர்வான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

 

 

 

 

 

 

 

உலகை அச்சுறுத்த வா: 

உலகை அச்சுறுத்த வா தலைவா, வா தலைவா வா, என்ற ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் 31-ம் தேதி தன் கட்சியின் பெயரை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், மோசமான உடல்நிலை காரணமாக அரசியல் எண்ணத்தைக் கைவிட்டார். ரஜினியின் இந்த முடிவை எதிர்த்து அவருடைய ரசிகர்கள் ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்’ என வலியுறுத்தி, சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரும் ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளருமான ராமதாஸ் தலைமையில் இந்த அறப்போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: