New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a625.jpg)
2.0 படத்தில் வரும் ‘This is beyond Science’ என்ற வசனமும் பயன்படுத்தப்பட்டுள்ளது
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி காவல் துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பற்றி பதிவு செய்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் அளவு இருப்பது கண்டறியப்பட்டது . இந்த அளவு என்பது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்குச் சமம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள டெம்ப்லேட்டை பயன்படுத்தியுள்ளனர்.
A male subject to a breath test by Derby Police this morning provided a reading that biologically shouldn't even be possible.
The male had a BAC of 0.341% which is like driving whilst under a surgical anaesthetic or being in a coma. Oh, and he has 2 prior life disqual's ????
#fb pic.twitter.com/roHAzHq1pv
— Derby Police (@DerbyPol) 9 February 2019
டெர்பி நகர போலீசாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், அந்த நபரின் உடலில் 0.341% ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் இது கோமா நிலையில் இருப்பது போன்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.0 படத்தில் வரும் ‘This is beyond Science’ என்ற வசனமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதனை அதிகமாகப் பகிரத் தொடங்கியதால், இந்த மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.