Rajinikanth’s Lal Salam firstlook troll: ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், போஸ்டர் சிறப்பாக இல்லை, சராசரிக்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ‘லால் சலாம்’ படத்தில், நடிப்பதற்காக ரஜினிகாந்த் மும்பை மே 07-ம் தேதி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு மே 7-ம் தேதி நள்ளிரவு வெளியிட்டது. மேலும், போஸ்டரில், ‘மொய்தீன் பாய் ஆட்டம்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னணியில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ‘லால் சலாம்’ படத்தின் போஸ்டர் சிறப்பாக இல்லை, சராசரிக்கும் குறைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷாவாக கெத்தாக மாஸாக வந்த ரஜினிகாந்த்தை, ‘லால் சலாம்’ படத்தில் இப்படி பண்ணீட்டிங்களே இன்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிலர், “டேய்! தலைவர என்னடா பண்ணி வச்சிருக்கீங்க” என்று கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

‘லால் சலாம்’ படத்தின் போஸ்டர் குறித்து, “தென்னிந்திய சினிமாவோட மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை வெச்சு ஒரு படம் பண்றப்போ, இவ்ளோ கேவலமான ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் பண்ண முடியுமா?
‘முடியும்’ அப்படின்னு கான்ஃபிடண்ட்டா பண்ணியிருக்காங்க ஏற்கெனவே 2 படம் எடுத்த இந்த டைரக்டர்.
கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல ஜெராக்ஸ் கடை” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு ட்விட்டர் பயனர், “ தலைவர் இதில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். இன்னும் உங்களால் சரியான தோற்றத்தை கொடுக்க முடியவில்லை. தலைவர் ரசிகர்கள் இந்த தோற்றத்தையும் போஸ்டரையும் பாராட்டுபவர்கள், தயவுசெய்து நேர்மையான கருத்தைத் தெரிவிக்கவும், இதனால் தயாரிப்பாளர்களை மேம்படுத்த முடியும்” பதிவிட்டுள்ளார்.
‘லால் சலாம்’ படத்தின் போஸ்டர் குறித்து ரசிகர்களின் கம்மெண்ட்டுகளை இங்கே தொகுத்து தருகிறோம்.
‘லால் சலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்ரோல்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“