இஸ்லாமிய மக்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும். ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இந்தப் பெருநாளில் இஸ்லாமிய மக்களின் வீடுகளில் பொதுவாக பிரியாணி தயார் செய்வது வழக்கம். அப்படி சுவையும் மணமுமாக தயார் செய்யப்பட்ட இந்த பிரியாணி உணவை அண்டை வீட்டாரோடும், பிற மத நண்பர்களுடன் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களும் மனதார ஏற்று சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இந்த நிகழ்வை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் ரம்ஜான் பண்டிகை குறித்தும், இன்று தயார் செய்யப்படும் பிரியாணி குறித்தும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இணையவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வந்த இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் “ரம்ஜான் பிரியாணி” மீம்ஸ்:










இணையத்தை கலக்கி வரும் ரம்ஜான் பிரியாணி மீம்ஸ்:























“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“