மீம்ஸ் போட்டே ரம்ஜானுக்கு பிரியாணி கேட்கும் நெட்டிசன்கள்.. தெறித்து ஓடும் முஸ்லீம் நண்பர்கள்!

எப்ப பிரியாணி.. என்று ஃபேஸ்புக்கில் மீம்ஸ்களை போட்டு  அதகளப்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ரம்ஜான்  கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. முஸ்லீம் சகோதர்கள் ஒரு பக்கம் தொழுகை, உறவினர் வருகை என்று பிஸியாக இருக்க , அவர்களின் நண்பர்களோ எப்ப பிரியாணி .. எப்ப பிரியாணி.. என்று ஃபேஸ்புக்கில் மீம்ஸ்களை போட்டு  அதகளப்படுத்தி வருகின்றனர்.

எவ்வளவு தான் செலவு செய்து, பெரிய  பெரிய ஹோட்டலுக்கு சென்று பிரியாணி வாங்கி சாப்பிடாலும். பாய் வீட்டு பிரியாணி.. பிரியாணி தான் என்பார்கள்.  அதை சாப்பிட்டவர்களுக்கு தான் அதன் டேஸ்ட் எப்படி இருக்கும் என்று தெரியும்.  ரம்ஜான் என்றாலே பிரியாணி தான் என்ற எண்ணத்தையும் இன்றைய இளைஞர்கள் மறக்காமல்  நினைத்து  வைத்துக் கொள்கிறார்கள்.  அதை அப்படியே தங்களின் மீம்ஸ்களிலும் காட்டி விடுகிறார்கள்.

நேற்று இரவு முதல்  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில்  ரம்ஜான் பிரியாணி குறித்து இவர்களும் போடும் மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் சொல்லி தீராது.. நீங்களே பாருங்கள்.

×Close
×Close