எப்படி இருந்த மனுஷன் தெரியுமா? நீலக்கலர் சொக்காவும் கழுத்துச் சங்கிலியுமாக ரன்வீரின் ட்ரெண்டிங் புகைப்படங்கள்

டிஸ்க்ளைமர் கொடுத்துறோம்: சின்ன குழந்தைங்க, வயசானவங்க, அப்பறம் ப்ரெக்னண்ட் லேடீஸ் இந்த போட்டவ பாக்காதீங்க…

Ranveer Singh, Gucci, Viral Photos

அட நாம நெறைய இந்தி படம் பாக்கலைனாலும், பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களின் மூலம் நமக்கு தெரிந்தவர் தான் ரன்வீர் சிங். தீபிகா படுகோனின் கணவரான இவருடைய நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அதே போன்று இவரின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளும் பல நேரங்களில் பிரமிக்க வைக்கும். சில நேரங்களில் ட்விட்டரில் இவரின் புகைப்படத்தை போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இவருடைய நீலக்கலர் சொக்காயும், கழுத்து சங்கிலியும் ட்விட்டர்வாசிகளை தூங்கவிடாமல் செய்துவிட்டது.

மிகவும் பிரபலமான அக்சசரீஸ் வழங்கும் நிறுவனமான Gucci – நிறுவனத்தின் விளம்பரங்களுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை பார்த்து நம்மை போன்றே பதறிய சில மீம் கிரியேட்டர்கள் இந்த புகைப்படங்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர்.

டிஸ்க்ளைமர் கொடுத்துறோம்: சின்ன குழந்தைங்க, வயசானவங்க, அப்பறம் ப்ரெக்னண்ட் லேடீஸ் இந்த போட்டவ பாக்காதீங்க. சும்ம்ம்ம்மா… இந்த புகைப்படங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன என்று எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ranveer singh gucci photoshoot triggers hilarious meme fest online

Next Story
இந்த ‘செல்ஃபி’க்கு சுமார் 50,000 ‘ரீட்வீட்’… அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com