குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் எலியும் புலியாகும்; ஓடி ஒளிந்த பாம்பு; வைரல் வீடியோ
பாம்பிற்கு இரையாகும் எலி தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால், எலி உடனடியாக புலியாக மாறி பாம்பை விரட்டி விரட்டி அடித்து குட்டியைக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாய்மை மிகப்பெரிய வலிமை என்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.
பாம்பிற்கு இரையாகும் எலி தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால், எலி உடனடியாக புலியாக மாறி பாம்பை விரட்டி விரட்டி அடித்து குட்டியைக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாய்மை மிகப்பெரிய வலிமை என்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.
rat chasing snake for save rat kid, rat fighting with snake, rat fight with snake for save rat kid, பாம்புடன் சண்டையிட்ட எலி, எலி பாம்பு சண்டை, குட்டியைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்ட எலி, வைரல் வீடியோ, viral video, trending video news, latest video news, latest viral video news, latest tamil video news
பாம்பிற்கு இரையாகும் எலி தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால், எலி உடனடியாக புலியாக மாறி பாம்பை விரட்டி விரட்டி அடித்து குட்டியைக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாய்மை மிகப்பெரிய வலிமை என்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.
Advertisment
பலவீனமான விலங்குகள், பறவைகள்கூட தனது குட்டிகளுக்கு குஞ்சுகளுக்கு ஒரு ஆபத்து என்றால் அவற்றின் தாய் விலங்குகள், தாய்ப் பறவைகள் திடீரென ஆக்ரோஷமாக மாறி பாதுகாப்பதைப் பார்த்திருப்போம்.
கிராமப்புறங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் கோழி வளர்ப்பார்கள். அப்போது கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரித்து வெளியே செல்லும்போது, பருந்துகள் கோழிக் குஞ்சுகளை தூக்கிச் செல்ல வரும். அப்போது, பருந்துகளைவிட மிகவும் பலவீனமான கோழி, தனது குஞ்சுகளை பருந்து கொத்தி துக்கிச்செல்ல வருவதை அறிந்ததும் திடீரென ஆக்ரோஷமாக மாறி கொக்கரித்துக்கொண்டு பருந்தை விரட்டிச் செல்லும். இதை பலரும் பார்த்திருப்போம். இது தான் ஒவ்வொரு விலங்குகள் பறவைக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசம்.
Advertisment
Advertisements
அதே போல, ஒரு பாம்பு தனது குட்டியை கவ்விச் செல்வதைப் பார்த்த தாய் பாம்பையே ஓட ஓட விரட்டி குட்டியைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
This snake was never seen again.
Shamed to fame by a rat chasing it down????
But when you see it’s the mother who did it, one realises that mother’s can do anything for their kid. Motherhood can be the biggest weapon on earth???? pic.twitter.com/gTF1KOXR7c
எலி தனது குட்டியை பாம்பிடம் இருந்து சண்டை போட்டு காப்பாற்றிய வீடியோவை வனத்துறை அதிகாரி சுஸந்தா நந்தா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ஒரு பெரிய பாம்பு ஒரு எலிக் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு செல்கிறது. இதனைப் பார்த்த தாய் எலி, பாம்பின் வாலைக் கடித்து பின் தொடர்ந்து விரட்டுகிறது. எலியின் வேகமான பின்தொடர்ந்த தாக்குதலை சமாளிக்க முடியாதா பாம்பு வாயில் கவ்வியிருந்த எலிக்குட்டியைப் போட்டுவிட்டு ஒரு புதருக்குள் ஓடி மறைகிறது. அதற்குப் பிறகு, தாய் எலி அந்த பாம்பை விடுவதாக இல்லை. எலி அந்த பாம்பை புதருக்குள்ளும் விரட்டிச் சென்று அந்த பாம்பு காணவில்லை என்ற பிறகுதான் எலி வெளியே வருகிறது. இதையடுத்து, அந்த எலி தனது குட்டியை அழைத்துக்கொண்டு சாலையைக் கடந்து செல்கிறது.
உண்மையில், இந்த வீடியோ ஒரு எலியின் தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த வீடியோ குறித்து சுஸந்தா நந்தா குறிப்பிடுகையில், “ஒரு எலி துரத்திய பாம்பை பார்க்க முடியாது. ஆனால், ஒரு தாய் எலி இதை செய்திருப்பதை பார்க்கும்போது, தாய் தங்கள் குட்டிகளுக்காக எதையும் செய்யும் என்பதை ஒருவர் உணர்ந்துகொள்ள முடியும். தாய்மைதான் இந்த பூமியின் மிகப்பெரிய ஆயுதமாக இருக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக எலிகள்தான் பாம்புகளுக்கு இரையாகும். வலிமையான நச்சு கொண்ட பாம்புகளுக்கு இரையாவதுதான் இயற்கை நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு எலி தனது குட்டிக்கு பாம்பினால் ஒரு ஆபத்து என்றால் அந்த எலி உடனே ஆக்ரோஷமாக ஒரு புலியைப் போல பாம்பை விரட்டிச் சென்று குட்டியைக் காப்பாற்றுகிறது. உண்மையில், தாய்மையின் வலிமையை இந்த வீடியோ பறைசாற்றுவதாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"