Advertisment

“மது குடிப்பவர்களுக்கு உணவு மானியம் இல்லை” - என நான் கூறவில்லை; மறுப்பு தெரிவித்த ரதன் டாட்டா

உங்களுடைய மொபைல் எண்ணுக்கு எத்தகைய செய்தி வந்தாலும் சரி அதன் உண்மை தன்மை என்ன என்று அறிந்து கொண்டு பிறகு செயல்பட துவங்குவது மிகவும் நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ratan tata

Ratan Tata says viral post : சமூக வலைதளங்கள் முழுவதும் புகைப்படம், கட்டுரை, வீடியோக்கள் என பல்வேறு கண்டெண்ட்டுகள் இருக்கின்றன. சில நேரங்களில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் அவல நிலையும் இருக்கத்தான் செய்கிறது. யாராவது ஒரு முக்கிய நபர் அதைக் கூறினார், இதைக் கூறினார் என்று எதையாவது கிளப்பிவிட்டு அதனை இறுதியில் வைரல் கண்டெண்ட்டாக மாற்றி விடுகிறார்கள், அப்படித் தான் ஆதார் அட்டை மூலம் மது விற்பனை செய்ய வேண்டும் என்று ரதன் டாட்டா கூறியதாக பலரும் தங்களின் வாட்ஸ்ஆப்களில் ஸ்டேட்டஸாக வைத்துக் கொண்டு சுற்றி வந்தனர். அவருடைய புகைப்படங்களுடன் “மது விற்பனை செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கும் உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் நிச்சயமாக உணவையும் பெற முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பதால் தான் அவர்கள் மது வாங்குகின்றனர்” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

முடிந்தவரை போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் தன்னுடைய ஸ்டோரியில் அந்த செய்தியை பகிர்ந்து, இது நான் கூறவில்லை என்று விளக்கம் தந்துள்ளார் டாட்டா.

publive-image

இதற்கு முன்பு, இப்படியான சூழல் ஒன்றை எதிர்கொண்ட மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திராவும் ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவல்கள் பரவுகிறது என்று குறிப்பிட்டு அந்த செய்தியை வெளியிட்டு மறுப்பும் கூறியுள்ளார். உங்களுடைய மொபைல் எண்ணுக்கு எத்தகைய செய்தி வந்தாலும் சரி அதன் உண்மை தன்மை என்ன என்று அறிந்து கொண்டு பிறகு செயல்பட துவங்குவது மிகவும் நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ratan Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment