தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாய்கள் மீதுள்ள அன்பு அனைவருக்கும் தெரியும். அவர் ஜூன் 26-ம் தேதி அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தார். மும்பையில் உள்ள அவரது நாய்க்குட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அந்த 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்பவரைக் கண்டறிய உதவி கோரியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், அவர் தேவையைப் பகிர்ந்து, மும்பை தனக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான உண்ணி காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகையைத் தொடர்ந்து நாய் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. “உங்கள் உதவியை நான் மிகவும் பாராட்டுகிறேன். எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள இந்த 7 மாத நாய்க்கு அவசரமாக ரத்தம் ஏற்ற வேண்டும். அது சந்தேகத்திற்கிடமான உண்ணி காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நாய் ரத்த தானம் செய்பவர் அவசரமாக தேவை” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவின்படி நாய் ரத்த தானம் செய்ய தகுதிக்கான அளவுகோல்கள்:
மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
1 முதல் 8 வயது வரை இருக்க வேண்டும்.
நாயின் எடை சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், குடற்புழு நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சமீபகாலமாக எந்த ஒரு பெரிய நோயின் தாக்குதலும் இல்லாமல் இருக்க வேண்டும்.
உண்ணி மற்றும் பூச்சிகள் இருக்கக் கூடாது, குறைந்தது கடந்த 6 மாதங்களில் உண்ணி காய்ச்சலின் வரலாறு இல்லை.
இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ரத்தன் டாடா, “மும்பை, எனக்கு உங்கள் உதவி தேவை” என்று எழுதியுள்ளார்.
ரத்தன் டாடாவின் இந்த பதிவைப் பாருங்கள்:
இந்த பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்தவுடன், பல பயனர்கள் நாய்கள் மீது டாடாவின் விருப்பத்தை பாராட்டினர். இதற்கு பதிலளித்த ஒரு பயனர், “உங்கள் செயல்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உண்மையான அர்ப்பணிப்பு மூலம் நீங்கள் மிகவும் அன்பான நபர் சார்” என்று எழுதினார்.
மற்றொரு பயனர், “உங்கள் பதிவைப் பகிர்ந்தீர்கள் சார், நீங்கள் இந்த அப்பாவி விலங்குகளுக்கு கடினமான வாழ்க்கைக்கு முடிவில் நீங்கள் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள்.” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
“இந்த உலகத்திற்கு நீங்கள் கடவுளின் பரிசு சார், அல்லது நீங்கள்தான் கடவுள்” என்று மூன்றாவது பயனர் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, ரத்தன் டாடா தாஜ்மஹால் ஹோட்டலின் ஹோட்டல் ஊழியர்களுக்கு, தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழைந்தால் அவற்றை நன்றாக நடத்துமாறு அறிவுறுத்தியதற்கான லிங்க்டுஇன் பதிவுக்குப் பிறகு தலைப்புச் செய்திகளில் இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.