Advertisment

மறைந்தார் ரத்தன் டாடா... டாப் டிரெண்டிங்கில் முதலிடம்!

ரத்தன் டாடாவின் மறைவு செய்தி புதன்கிழமை இரவு வெளியான பிறகு, கூகுள் தேடலில் டாப் டிரெண்டிங் டாப்பிக்காக 'ரத்தன் டாடா' பெயர் இருந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Ratan Tata tops Google search trends after his death Tamil News

மறைந்த ரத்தன் டாடா, கூகுள் தேடல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளார்.

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை காலமானார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாலையில் தகவல் வெளியாகியது. அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Advertisment

ரத்தன் டாடாவுக்கு கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக அவர் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தான் நலமுடன் இருப்பதாகவும், யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ratan Tata tops Google search trends after his death

ரத்தன் டாடா உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இன்னும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

டாப் டிரெண்டிங்கில் ரத்தன் டாடா

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மறைவு செய்தி புதன்கிழமை இரவு வெளியான பிறகு, கூகுள் தேடலில் டாப் டிரெண்டிங் டாப்பிக்காக 'ரத்தன் டாடா' பெயர் இருந்து வருகிறது. 

ட்ரெண்ட்ஸ் கூகுள் (trends.google) பக்கத்தின் படி, கடந்த 15 மணி நேரத்தில் ரத்தன் டாடா தொடர்பாக 5 மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள் இருந்ததாகவும், அவை 1000 சதவிகிதம் என்கிற அளவில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Ratan Tata news

தொழிலதிபரும், மனிதநேயமிக்கவருமான ரத்தன் டாடா, டாடா சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார். கடந்த 1961 இல் டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரத்தன் டாடா, டாடா ஸ்டீல் கீழ் தளத்தில் பணிபுரிந்தார். 1991 இல் டாடா சன்ஸ் ஓய்வு பெற்ற பிறகு, ஜே.ஆர்.​​டி டாடாவின் தலைவராக அவர் பின்னர் பதவியேற்றார். 

அவர் தனது பதவிக்காலத்தில் டாடா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் ஆகிய நிறுவங்களை கைப்படற்றினார். மேலும், இந்தியாவை தளமாக கொண்ட டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டார். அவர் 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார். 

இதன்பிறகு, அவர் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகியிருந்தாலும், டாடா அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்கினார். தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய  நன்கொடையாளர் என்கிற பெருமையைப் பெற்றார். அவரது சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தது. இதன்பிறகு, 2008 இல், அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Viral Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment