கைவிடப்பட்ட நாய்க்கு உதவ முன்வரும் ரத்தன் டாட்டா !

மைராவை அதன் குடும்பத்தோடு இணைக்கப் போராடும் நபரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், அல்லது அந்த போராடும் நபர் நீங்களாகவே இருந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் 

By: Updated: December 5, 2019, 08:05:56 PM

தொழிலதிபர் ரத்தன் டாட்டா விலங்குகள் மீதான தனது அன்பைப் பற்றி அடிக்கடி குரல் கொடுத்து வருபவர். இரண்டு செல்ல நாய்களை வைத்திருக்கும் டாட்டா , கடந்த ஆண்டு தனது மும்பை இல்லத்தின் ஒரு பகுதியை தெரு நாய்களுக்கு அர்ப்பணித்த செயல் அனைவரின்  பாராட்டுகளை பெற்றது. தற்போது ரத்தன் டாட்டாவின் கைவிடப்பட்ட 9 மாத  லேப்ரடார் நாய்க்கு உதவ முன்வந்திருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் உதவி செய்யும் விதம் சற்று வித்தியாசமானது.

 

‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி


மைரா என்ற 9 மாத லேப்ரடார்  நாய் தான் குடும்பத்தை இழந்து வாடியதை கண்ட  ரத்தன் டாட்டா, இதன் குடும்பத்தைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள என்று தனது இன்ஸ்டாக்ராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அவர், “இன்று விலங்குகள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள், இருந்தாலும் குடும்பத்தை இழந்து வாடும் விலங்குகளை நினைக்கும் போது உண்மையிலேயே ஏன் மனம் உடைகிறது, நேற்று இருந்த குடும்பம் இன்று இல்லாமல் போகும் போது அவர்களின் மனம் அடையும் வேதனையை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை” என்றார்.

ரத்தன் டாட்டாவின் கோரிக்கை :

9 மாத வயதான மைரா வின் கண்களில் உள்ள இரக்கம் கைவிடப்பட்ட பின்னரும் இருக்கிறது, உங்கள் உதவியை  நான் பயன்படுத்தினால் மைராவின்  குடுமபத்தைக் கண்டறிய முடியும்.

 

மைராவை அதன் குடும்பத்தோடு இணைக்கப் போராடும் நபரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், அல்லது அந்த போராடும் நபர் நீங்களாகவே இருந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள்  என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

ரத்தன் டாட்டாவின் முயற்சிக்கு மக்களின் கருத்துகள்:

 

 

 

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ratan tatas appeal to finding 9 month labrador dog myras instagram post went viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X