ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வளர்ப்பு நாய் கோவா: உருக்கமான வீடியோ

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் மும்பையில் உள்ள நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய மையத்துக்கு நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில், டாடாவின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய வளர்ப்பு நாய் கோவாவும் வந்து அஞ்சலி செலுத்தியது.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் மும்பையில் உள்ள நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய மையத்துக்கு நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில், டாடாவின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய வளர்ப்பு நாய் கோவாவும் வந்து அஞ்சலி செலுத்தியது.

author-image
WebDesk
New Update
1 goa

டாடாவின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய வளர்ப்பு நாய் கோவாவும் வந்து அஞ்சலி செலுத்தியது. (Image Source: x/ @_prashantnair)

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் மும்பையில் உள்ள நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய மையத்துக்கு நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில், டாடாவின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய வளர்ப்பு நாய் கோவாவும் வந்து அஞ்சலி செலுத்தியது.

Advertisment

தொழிலதிபர் ரத்தன் டாட உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் மும்பையில் உள்ள நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய மையத்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதில், ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் கோவா நேரில் வந்து அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் அருகே சென்று அஞ்சலி செலுத்தியது பலரையும் உருக்கமாக உணரச் செய்தது.

Advertisment
Advertisements

ரத்தன் டாடா சில வருடங்களுக்கு முன்பு கோவாவில், இந்த வளர்ப்பு நாயை மீட்டு பாம்பே ஹவுஸுக்கு அழைத்து வந்தார். தன்னை மீட்டு வளர்த்த டாடவுக்கு வளர்ப்பு நாய் கோவா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது.

வாழ்நாள் முழுவதும் விலங்குகளை நேசித்து வந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, காயம்பட்ட தெருநாய்களுக்கு அடிக்கடி உதவி செய்தார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் விலங்குகளை தத்தெடுப்பு முறையீடுகளை தொடர்ந்து பதிவிடுவார்.

அவர் தனது உதவியாளர் சாந்தனு நாயுடு (30) உடன் விலங்குகள் மீதான பரஸ்பர அன்பால் பிணைத்தார்.

பல ஆண்டுகளாக டாடா நிறுவனத்தில் பணிபுரியும் நாயுடு, தெரு நாய்கள் சாலையில் வாகனம் மோதாமல் இருக்க, அவற்றின் மீது ரிப்லெக்டிவ் காலர்களை வைப்பதை நோக்கமாகக் கொண்ட சிறு முயற்சியைத் தொடங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ratan Tata Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: