இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 வெற்றியைக் கொண்டாடும் ஓவியம் மூலம் தனது மறைந்த தாயாருக்கு ரவீந்திர ஜடேஜா இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார். அவரது சாதனைகளை தாயின் நினைவுகளுக்கு அர்ப்பணித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Ravindra Jadeja honours late mother with T20 World Cup sketch, melts hearts online
ரவீந்திர ஜடேஜா தனது மறைந்த தாயாரை நினைவு கூர்ந்துள்ளார் - அவர் டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையுடன் தாயின் அருகில் நிற்பதைக் காட்டும் ஒரு ஓவியத்தின் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த மாதம் கென்சிங்டன் ஓவலில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான ஜடேஜா மற்றும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றியது, 13 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்டியது.
ஜடேஜாவின் தாயார் 2005-ல் காலமானார். ஜடேஜாவுக்கு 17 வயது இருந்தபோது, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இதயத்தைத் தொடுகிற விதமாகத் தனது தாயை நினைவு கூர்ந்தார். “நான் களத்தில் என்ன செய்தாலும், அது உங்களுக்கு செய்யும் அஞ்சலி” என்று ஜடேஜா எழுதியுள்ளார்.
ஜடேஜா ஒரு கையில் டி20 உலகக் கோப்பையுடன் அவருடைய மறைந்த தாயின் அருகில் நிற்கிற ஓவியம், 12 லட்சத்து 57 ஆயிரத்து 766 லைக்குகளைப் பெற்று ஜடேஜாவின் சமூக ஊடக தளத்தில் ரசிகர்களின் இதயங்களை வென்றது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “இது எங்கள் இதயங்களைக் கவர்ந்துவிட்ட்து” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “தளபதி உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்” என்று கூறியுள்ளார். மூன்றாவது பயனர், “சார் ஜடேஜா மரியாதை பட்டன்” என்று எழுதினார். நான்காவது பயனர், “இது எங்கள் இதயங்களைத் வலிக்கச் செய்கிறது ஜடேஜா சார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற ஜடேஜா முடிவு செய்தார். இந்த வெற்றியை தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சமாக விவரிக்கும் உணர்ச்சிகரமான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“