scorecardresearch

‘ஆல்ரவுண்டர்னு சொல்லி ஒருத்தன் ஊரை ஏமாத்துறான் சார்’: ஜடேஜாவை கலாய்க்கும் தெறி மீம்ஸ்

சென்னை அணியில் ஆல் ரவுண்டராகக் குறிப்பிடப்படும் ஜடேஜா, அப்படி விளையாடவில்லை என்பதைக் குறிப்பிடும் விதமாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில், ‘ஆல்ரவுண்டர்னு சொல்லி ஒருத்தன் ஊரை ஏமாத்துறான் சார்’: ஜடேஜாவை கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

Ravindra Jadeja mocking people, Ravindra Jadeja mocking cricket fans, 'ஆல்ரவுண்டர்னு சொல்லி ஒருத்தன் ஊரை ஏமாத்துறான் சார், ஜடேஜாவை கலாய்க்கும் தெறி மீம்ஸ், Ravindra Jadeja, csk, jadeja memes, jadeja fake all rounder netizen memes
ஜடேஜா மீம்ஸ்

Trending jadeja memes: ஐ.பி.எல் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் மோசமாக விளையாடிய ஜடேஜாவை விமர்சித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சென்னை அணியில் ஆல் ரவுண்டராகக் குறிப்பிடப்படும் ஜடேஜா, அப்படி விளையாடவில்லை என்பதைக் குறிப்பிடும் விதமாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில், ‘ஆல்ரவுண்டர்னு சொல்லி ஒருத்தன் ஊரை ஏமாத்துறான் சார்’: ஜடேஜாவை கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் விளையாடியது. இந்த போட்டியில், சென்னை அணி 200 ரன்கள் அடித்தபோதும், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தையும் சோகத்தையும் சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது 16-வது ஓவர் முடிவில் களமிறங்கிய ஜடேஜா 10 பந்துகளை சந்தித்து 12 ரன்களை மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் இப்படி நிதானமாக ஆடியதால் சென்னை அணி 15 ரன்களை குறைவாக எடுத்தது. இதுவும் சென்னை அணி தோல்வி அடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனால், ஜடேஜா மீது கோபமடைந்த கிரிக்கெட்டில் ஆர்வம்கொண்ட நெட்டிசன்கள், இதனை சென்னை 28 படத்தில் வரும் பிரேம்ஜி அறிமுகக் காட்சியை மாற்றி, இவன் தாங்க ஜடேஜா.. ஆல் ரவுண்டர்னு சொல்லிட்டு திரிவான்.. ஏதாவது எப்பவாது ஒரு மேட்ச்ல அடிப்பான் என்று மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்கள்.

அதே போல, தோனி களமிறங்கிய போது, மைதானத்தில் இருந்த ஸ்பீக்கரில் ரஜினிகாந்த்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான பாட்ஷா.. பாட்ஷா என்று பிஜிஎம் போடப்பட்டது. அதற்கேற்ப தோனியும் இறங்கி 2 சிக்சர்களை விளாசினார். இதையும் மீம்ஸாக போட்டுள்ளனர்.

அதே போல, சென்னை அணியின் மாஜி வீரரான சாம் கரண், இப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய சாம் கரண், 20 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இதனை விக்ரம் படத்தில் குழந்தையிடம் கமல் பேசுவதை மாற்றி, தோனி சாம் கரணிடம் பேசுவது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தோனி சாம் கரணை பார்த்து, “சுட்டிக் குழந்தை சுட்டிக் குழந்தைனு எனக்கே டஃப் கொடுக்குற” என்று சொல்வது போல மீம்ஸ் போட்டுள்ள்னனர்.

தோனி 4 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்களை அடித்ததைக் குறிப்பிடும் விதமாக, அயன் படத்தில் வில்லனை கழுத்தை பிடித்து பிரபு ஒரே கையால் தூக்கிவிடுவார். அப்போது வில்லன் பிரபுவை பார்த்து, “உன் இரத்தத்துல இன்னும் சூடு குறையல தாஸ்” என்று சொல்லுவார். அதுபோல் பஞ்சாப் பவுலர்கள் தோனியை புகழ்வது போல் மீம்ஸ் மூலம் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

சென்னை அணியின் ஸ்பின் பவுலர் தீக்சனா ஃபீல்டிங்கின் போது ஏராளமான பந்துகளை தடுக்காமல் கோட்டைவிட்டார். இதை 6.2 படத்தில் வடிவேலு பேசும், “யப்பா யாராச்சும் தண்ணி விட்டு அலசி விடுங்கப்பா” என்று சொல்லுவார். அதனை அப்படியே தீக்சனாவுக்கு மாற்றி, “யப்பா யாராச்சும் இவனுக்கு நல்ல ஃபீல்டிங் கோச்சிங் கொடுங்கப்பா” என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணியில் ஜட்டு, தீக்‌ஷனா என சொதப்பினாலும் இலங்கையைச் சேர்ந்த பத்திரனா சிறப்பாக பந்துவீசினார். கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசினார். அவரை பாராட்டும் விதமாக, யாரடி நீ மோகினி படத்தில் நேர்காணலில் இருந்து வெளிவரும் தனுஷிடம் ரகுவரன் சொல்வது போல், “சரி விடு.. அடுத்த நேர்காணல்-ல பாத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறுவார். அதனை அப்படியே மாற்றி, தோனி பதிரானாவுக்கு ஆறுதல் சொல்வது போல், “சரி விடு.. அடுத்த ஆட்டத்த்துல பாத்துக்கலாம்” என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Ravindra jadeja mocking people as all rounder netizen memes