New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/02/ZJ5yMfIVb0XqhNmbenvx.jpg)
மியான்மர் நிலநடுக்கத்தின் போது ஒரு மருத்துவமனையில் செவிலியர்களும் பச்சிளம் குழந்தைகளும் காயமின்றி தப்பினர். (Image source: @dailymail/Instagram)
மியான்மர் நிலநடுக்கத்தின் போது ஒரு மருத்துவமனையில் செவிலியர்களும் பச்சிளம் குழந்தைகளும் காயமின்றி தப்பினர். (Image source: @dailymail/Instagram)
மியான்மரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. கட்டடங்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு இடிந்து விழுந்த நிலநடுக்கத்தின் பேரழிவு வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் செவிலியர்கள் பற்றிய ஒரு மனதைக் கவரும் வீடியோ சமூக ஊடகங்களில் இதயங்களை வென்று வரைலாகி வருகிறது.
மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரமான ருய்லியில் உள்ள ஒரு மகப்பேறு பிரிவில் இருந்து தற்போது வைரலாகியுள்ள சிசிடிவி காட்சிகள், நிலநடுக்கத்தின்போது ஒரு செவிலியர் ஒரு குழந்தையைப் பாதுகாக்க மண்டியிடுவதையும், மற்றொரு செவிலியர் தொட்டிலில் உள்ள மற்ற குழந்தைகள் கீழே விழாமல் பிடித்துக் கொள்வதையும் காட்டுகிறது. நிலநடுக்கத்தின் போது செவிலியர்களும் பச்சிளம் குழந்தைகளும் காயமின்றி தப்பித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில், நிலநடுக்கம் தீவிரமடைந்து, பச்சிளம் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் தொட்டில்களை வேகமாக ஆட்டுச்கிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்ட, டெய்லி மெயில், “மனிதநேயம் மற்றும் உண்மையான தொழில்முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று எழுதியுள்ளது.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதுகாத்ததற்காக செவிலியர்களைப் பல பயனர்கள் பாராட்டினர். “என் பார்வையில் அவர்கள் ஹீரோவாக இருக்கிறார்கள்” என்று ஒரு பயனர் எழுதினார். “பெண்கள் எதையும் கையாள முடியும்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“நிஜ ஹீரோக்கள். மனிதநேயம் மீட்டெடுக்கப்பட்டது. இதிலிருந்து அவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். நேரடியாக ஜனாதிபதியிடமிருந்து வெகுமதி வழங்கப்பட வேண்டும்” என்று மூன்றாவது பயனர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திங்கள்கிழமை, மியான்மரின் மண்டலே பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 7 உடல்களை மீட்டது. சுமார் பன்னிரண்டு கட்டமைப்புகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பான இந்தியக் குழு, மியான்மரின் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான மண்டலே நகரத்தின் பிரிவு டி-க்குள் பணியாற்றி வருகிறது.
அழுகும் உடல் பாகங்களில் இருந்து நோய் பரவுவதைத் தடுக்க, உடல்களை விரைவாக மீட்கும் இந்தியாவின் மனிதாபிமானப் பணியான ஆபரேஷன் பிரம்மாவின் ஒரு பகுதியாக, தேசிய பேரிடர் மீட்புப் படை சனிக்கிழமை மியான்மருக்கு சென்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.