அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி அவர் வாக்கு சேகரித்தார்.
நம் ஊர்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்திலும் பல வகையான வாக்கு சேகரிப்பை பார்த்திருப்போம். மக்களின் ஆதரவைப் பெற வேட்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சில சுவாரசியத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, சாலையோரம் பொதுமக்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துவது, ஆட்டோ ஓட்டுவது, குப்பைகளை அப்புறப்படுத்துவது, உணவகங்களில் தோசை சுடுவது போன்று பல செயல்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கப்படும். மக்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதாக நினைத்து வேட்பாளர்கள் இது போன்ற உக்தியில் ஈடுபடுவார்கள்.
இந்த வாக்கு சேகரிப்பு முறைகள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே நடைபெறுவதாக நம்மில் பலர் நினைத்திருப்போம். ஆனால், அமெரிக்க தேர்தல் பரப்புரை வரை இந்த வகையான வாக்கு சேகரிப்பு சென்றடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஃபெர்ஞ்ச் ஃப்ரைஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியபடி அவர் பரப்புறையில் ஈடுபட்டார்.
வீடியோவைக் காண:
Listen to this Indian dude that pulls up
— Hodgetwins (@hodgetwins) October 20, 2024
All Americans love Trump pic.twitter.com/x0RHCP6OtI
குறிப்பாக, மெக்டோனால்ட்ஸ்-க்கு வருகை தந்த இந்தியருக்கு அவர் உணவு பரிமாறினார். ட்ரம்பைக் கண்டதும் ஆச்சரியமடைந்த அந்த இந்தியர், ட்ரம்புக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், ட்ரம்ப்பை Mr. President என்று அந்நபர் அழைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.