செருப்பு தொழிலாளியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ் அப்!
உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
செருப்பு தொழிலாளியின் வாழ்க்கை வாட்ஸ் அப்பால் முற்றிலுமாக மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
செருப்பு தொழிலாளி
ஹரியானாவில் செருப்பு தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ் அப் மூலம் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் செருப்பு தொழிலாளி அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.
‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு, அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.
This man should be teaching marketing at the Indian Institute of Management… pic.twitter.com/N70F0ZAnLP
— anand mahindra (@anandmahindra) 17 April 2018
இந்த மார்க்கெட்டிங் டெக்னிக் தான் ஆனந்த் மகிந்த்ராவை அட்டராக் பண்ணியுள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரிய வந்தது. அதன் பின்பு, அவரின் சகாக்கள் ஹரியானா விரைந்தனர். செருப்பு தொழிலாளி (மருத்துவர்) நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் கேட்ட, நரசிம்மனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? ”ஓ அப்படியா சரி”… பின்பு அவர்கள் நரசிம்மனிடம் பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Remember the cobbler Narsi Ram with the innovative banner ‘Zakhmi Jooton Ka Hospital?’ Our team had contacted him & conveyed my interest to invest in him.He said he wanted a good kiosk. This is what our Design studio in Mumbai came up with:Great work guys! Will be delivered soon pic.twitter.com/wDgKDPoeHr
— anand mahindra (@anandmahindra) 1 August 2018
அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.