Advertisment

வீட்டுக்கு விருந்தாளியாக வந்த மயில்... உணவு வழங்கிய கோவை பேராசிரியர் - வீடியோ

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தேசிய பறவையான மயில் ஒன்று, அவ்வீட்டில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டுச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Peacock

திருச்சி மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் சுப்பிரமணியம். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவை வடபள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

Advertisment

இவரது வீடு அமைந்துள்ள பகுதி மருதமலை மற்றும் அதன் அடிவாரத்தையொட்டியுள்ளதால் அங்கு நிறைய மயில்கள் காணப்பகுகின்றன. இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஆண்மயில் ஒன்றிற்கு குகன் எனப் பெயர் வைத்து அழைக்கிறார். மேலும், இவரது வீட்டிற்குள் சாதாரணமாக நடந்து வரும் மயில், அங்கு வைக்கப்பட்டுள்ள உணவை சாப்பிட்டுச் செல்கிறது. 

இதனை அவர் தனது செல்போனில் பதிவு செய்த கட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோவைக் காண: 

Indian Express Tamil on X: "வீட்டுக்கு விருந்தாளியாக வந்த மயில்... உணவு வழங்கிய கோவை பேராசிரியர் - வீடியோ! https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | #peacock | #viralvideo | 📹 @rahman14331 https://t.co/UAMOn4UiDx" / X

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Viral Video Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment