ஊரடங்கை மீறினால் காண்டாமிருகம் துரத்தும்: அட, இது எந்த ஊரில்?

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை போலீசார் விரட்டி வருகின்றனர். போலீஸ் விரட்டினால் பரவாயில்லை காண்டாமிருகம் விரட்டினால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒருவரை காண்டாமிருகம் துரத்திய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

By: April 7, 2020, 5:11:58 PM

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை போலீசார் விரட்டி வருகின்றனர். போலீஸ் விரட்டினால் பரவாயில்லை காண்டாமிருகம் விரட்டினால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒருவரை காண்டாமிருகம் துரத்திய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க உலகத்தில் பல நாடுகள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. தெற்காசியாவில் இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா சமூகப் பரவல் மூலம் வேகமாகப் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள், கொரோனா பரவலைத் தடுக்க திவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்தியாவசித் தேவைகளுக்கு தவிர அநாவசியமாக வெளியே சுற்றினால் போலீசார் அவரகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் தேவையிலாமல் வெளியே சுற்றுபவர்களை போலிசார் விரட்டி அடித்து வருகின்றனர். இதனால், கொரோனாவுக்குகூட பயப்படாத அசட்டைப் பேர்வழிகள் துரத்தி துரத்தி வெளுக்கும் போலீஸுக்கு பயந்து வீட்டிலேயே இருந்து வருகின்றனர். வெளியே சுற்றினால் போலீஸ் விரட்டி அடித்தால் பரவாயில்லை. அதுவே ஒரு காண்டாமிருகம் துரத்தினால் என்ன ஆகும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். ஆமாம், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது யாருமற்ற சாலையில் வெளியே சுற்றிய ஒருவரை காண்டமிருகம் ஒன்று துரத்தியுள்ளது. ஆனால், அது நம்ம நாட்டில் இல்லை என்று ஆருதல் அடையுங்கள்.


அண்டை நாடானா நேபாளத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், நேபாளில் கடைகள், மார்க்கெட்கள் என அனைத்தும் மூடப்பட்டு எல்லா சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்த நிலையில், நேபாளில் மூடப்பட்ட கடைத்தெருக்களில், சாலைகளில் காண்டாமிருங்கங்கள் சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

சித்பவன் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் காண்டாமிருகம் சுதந்திரமாக சுற்றி வருகிறது. நேபாளில் உள்ள சித்பவன் தேசிய பூங்காவில் காண்டாமிருகம் அதிக அளவில் உள்ளன. அவை ஊரடங்கு காலத்தில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சாலைகளில் சுற்றித் திரிவது வழக்கம்.

வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு சிலர் மட்டும் இருக்கும் சாலையில் காண்டாமிருகம் ஒன்று நடந்து செல்கிறது. அபோது அங்கே சாலையில் நடந்து செல்லும் ஒருவரை அந்த காண்டாமிருகம் துரத்துகிறது. இதனால், அந்த நபர் அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார். சிறிது தூரம் துரத்தியதும் அந்த காண்டாமிருகம் ஆர்வமிழந்து மீண்டும் அதன் போக்கில் செல்கிறது.” இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rhino walking streets chases a man away viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X