ஆயுஷ் மாத்ரே பாசறை: கிரிக்கெட் வீரர்களை அரசியல் தலைவர்களாக சித்தரித்து ரகளை மீம்ஸ்!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை என சொல்லலாம். அப்படி, கிரிக்கெட் வீரர்களை அரசியல் தலைவர்களாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள ரகளையான மீம்ஸ்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை என சொல்லலாம். அப்படி, கிரிக்கெட் வீரர்களை அரசியல் தலைவர்களாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள ரகளையான மீம்ஸ்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
political leaders as cricketers

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை என சொல்லலாம். அப்படி, அரசியல் தலைவர்களை கிரிக்கெட் வீரர்களாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள ரகளையான மீம்ஸ்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

ஆயூஷ் மாத்ரேவுக்கு 17 வயதுதான். சென்னை அணியின் இளம் வீரரான இவர், தனது முதல் ஐ.பி.எல். போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் எனும் ஜாம்பவான் அணியை எதிர்கொண்டார். சி.எஸ்.கே அணியின் ரன்ரேட் மிகவும் மந்தமாக இருக்கையில் களமிறங்கிய மாத்ரே, அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடினார். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் அவர் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். அப்படி பல கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த ஆயுஷ் மாத்ரேவுக்கு சி.எஸ்.கே. அணியினர் பாசறை ஒன்று அமைத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆயுஷ் மாத்ரே பாசறை என்ற பெயரில், தி.மு.க-வின் போஸ்டரை பட்டி டிங்கரிங் செய்து, உதயநிதியின் மகன் இன்பநிதி புகைப்படத்திற்கு பதில் ஆயுஷ் மாத்ரே படத்தை ஒட்டி, எதிர்காலமே என்று அடைமொழி போட்டு ஸ்டாலினுக்கு பதில் தோனி, ருத்ராஜ், ஜடேஜா, சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் புகைப்படங்களுடன் அதிரடியான போஸ்டர் ஒன்று ஹால்ஃப் பாயில் அட்மின் என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ayush mathre pasarai

Advertisment
Advertisements

இதேபோல்,  அதிமுக விளம்பர பேனரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் போட்டோ பதிவிட்டு ரகளையான மீம் உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு பதில் நீடா அம்பானி, ஓ.பி.எஸ்-க்கு பதில் ரோகித் சர்மா, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, திலக் வர்மா படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

admk banner

நாதக பிரசாரத்தின்போது சீமான் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆர்.சி.பி. அணியின் வீரர் விராட் கோலி படத்தை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

virat kohili nt

பாட்டாளி மக்கள் கட்சியின் விளம்பர பேனரில் லக்னோ அணி ரிசப் பண்ட், கே.எல்.ராகுல் படங்களுடன் மீம், அமமுக பேனரில் பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்தி ஜிந்தா போன்றோரின் புகைப்படங்களுடன் மீம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மீம்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Latest Tamil Memes Trending Tamil Memes Today

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: