என்ன நடக்கிறது தமிழகத்தில்? அரசியலில் குதிக்கிறாரா ஆர் .ஜே .பாலாஜி??

ஆர். ஜே மற்றும் காமெடி நடிகருமான  பாலாஜி அரசியலில் குதிக்க இருப்பதாகவும்,  அவரின் சின்னம் மற்றும்  கொடியை ட்விட்டரில்  பகிர்ந்திருப்பதாக புதிய செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வர தொடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் வரை  ரேடியோவில் ஆர். ஜே பாலாஜியின்  குரல் மற்றும் பேச்சுக்கு ரசிகராக இருந்த  பலரும்,  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு  பிறகு சமூக பிரச்சனைக்கு அவர் குரல் கொடுப்பதற்கும் தங்களின் முழு ஆதரவை  தெரிவித்தனர்.   விவசாய பிரச்சனையில் தொடங்கி, காவிரி விவகாரம்,   ஐபிஎல் போராட்டம் என பாலாஜி சொன்ன எல்லா கருத்துக்களை ரசிகர்கள் வரவேற்றனர்.

சமீப காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி கூறி வரும் அரசியல் குறித்த கருத்துக்கள் அனைத்தும்  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான்  சுவரோட்டிகளில்   ஆர். ஜே பாலாஜியின் புகைப்படத்துடன், , “மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! என வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம்”  என்ற வசனங்கள் இடம் பெற்று ஆரம்பித்தனர்.

 

சமூக வலைத்தளங்களிலும் இந்த சுவரோட்டி விளம்பரங்கள்  கடுமையான விவாதங்களை ஏற்படத் தொடங்கின.  ஆர். ஜே பாலாஜி கூடிய விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், மே 18 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாக  இருப்பதாக தகவல்கள்   உலா வர தொடங்கின.

ஆனால், இந்த  கருத்துக்கள் எதற்குமே பாலாஜி மறுப்போ,  விளக்கமோ அளிக்கவில்லை. இந்நிலையில்,  இன்று(12.5.18)  பாலாஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்  பக்கத்தில்  சுவரோட்டிகளில்  இடம் பெற்ற காளை பொருந்திய கொடி சின்னத்தை ப்ரோஃபைல் பிச்சராக  வைத்துள்ளார்.   இதன் மூலம்  பாலாஜி அரசியலில்   ஈடுப்பட போகிறாரா? சுவரோட்டிகளில்  இடம்பெற்ற   தகவல்கள் உண்மை தானா?  வரும் மே 18 ஆம்  தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட போகிறாரா ? என ஏகப்பட்ட கேள்விகள்  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

பிக் பாஸ்  ஜூலி  தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ள வீடியோவிலும் ஆர், ஜே பாலாஜியின் அரசியல் குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

×Close
×Close