Advertisment

'நான் அணியின் கேப்டன், அவர் பேட்டிங் செய்து பார்த்தது இல்லை': குல்தீப்-ஐ கிண்டல் செய்த ரோகித்; வைரல் வீடியோ

ஐ.சி.சியின் விளம்பர படப்பிடிப்பின் போது ரோகித் சர்மா குல்தீப் யாதவை கிண்டல் செய்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Ro kuldeep.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.  அங்கு பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

Advertisment

இந்நிலையில், ஐ.சி.சியின் விளம்பர படப்பிடிப்பின் போது ரோகித் சர்மா குல்தீப் யாதவை கிண்டல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விளம்பர படப்பிடிப்பில், ஐ.சி.சி ஓ.டி.ஐ Team of the year தொப்பியை குல்தீப்பிற்கு வழங்க ரோகித் இடம் கேட்கப்பட்டது. ரோகித் உடனடியாக இதை ஒப்புக்கொண்டு அவர் வழங்கினார்.  

Spinner குல்தீப்-யிடம் தொப்பியை வழங்கிய ரோகித், "இந்த அற்புதமான தொப்பியை ஒரு அற்புதமான தடகள வீரருக்கும், இந்திய அணிக்கு உண்மையான சொத்தாக இருப்பவருமான குல்தீப்புக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  

"நன்றி, ரோஹித் பாய்," என்று குல்தீப் பதிலளித்தார். தொடர்ந்து,  "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று ரோகித் கேட்கிறார். இதைத் தொடர்ந்து பேசிய குல்தீப், "அதிகம் சொல்ல ஒன்றுமில்லை. அதாவது,  எனக்கு கடந்த ஆண்டு பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறந்த சீசனாக இருந்தது"

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரோகித், பேட்? என்று கேட்டார். உடனே சுதாரித்த குல்தீப், I mean, uh. I mean, uh." என்று கூறி டெஸ்ட் தொடர் என்றார். ரோகித்  இது ஓ.டி.ஐ என்று கூறினார்.  இதன்பின், ரோகித்  "நான் இந்த அணியின் கேப்டன். அவர் பேட்டிங் செய்து நான் பார்த்ததில்லை. அதனால், அவர் என்ன பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று நகைச்சுவையாக பேசினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment