தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ’90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரோஜாவை ’செம்பருத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆர்.கே. செல்வமணி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த ரோஜா, தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது ஜெகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.
ரோஜாவுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் அன்ஷூ மாலிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளவர்.
இவரது சமீபத்திய புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. அதில் அன்ஷூ அவரது அம்மா ரோஜா போலவே மிகவும் அழகாக இருக்கிறார் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அன்ஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபாலோயர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ஒரு ஃபாலோயர் அன்ஷூக்கு ஐ லவ் யூ என்று சொன்னார். அதற்கு அன்ஷூவும் கூலாக ஐ லவ் யூ நன்றி என்று பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil